(Reading time: 8 - 16 minutes)

பெட்டி போன்ற பேட்டோ சட்டத்தில் இருந்தனர். அதைக் கண்டவருக்கு மனதில் பழைய நினைவுகள் ஓடியது. தன் தந்தையும் தாயும் தான் வயிற்றில் உறுவானதுதெரிந்த நாள் அன்று எடுத்த படம் அல்லவா இது. அதை சிலைபோல் செய்திருக்கின்றனர். பார்க்க நிஜமாக அப்பாவும் அம்மாவும் என் முன் நின்று சிரிப்பது போல் இருக்கிறதே. அம்மா தான் எவ்வளவு அழகு என்று மெய்மறந்தார்.

உயிருடன் ஒருவர்  முன் நிற்பது போன்ற வரைந்த ஓவியம். ஆனால் அது அமைக்கப்பட்ட விதத்தில் சிலை போல காட்சியளிக்கக்கூடியது. அமேரிக்காவில் இருந்து வரும் பேதிக்காக இவர்கள் பல பரிசுகளும் உடைகள், ஆபரணங்களுடன் காதிருக்க, பாரிஜாதமும் பரணிகிரிஸ்வரரும் கமலேஷ் உருவான சமயத்தில் எடுத்த புகைப்படத்தை சிலைபோல் வடித்துக் கொண்டுவந்தாள் பௌவ். அவர்கள் முகத்தில் காணும் மகிழ்ச்சி சொல்லிவிடும் அவர்கள் எப்படிப்பட்ட காதல் ஜோடிகள் என்று. அதைக் காணும் போதெல்லாம் அந்த நாலின் மகிழ்ச்சியில் பாட்டி வெட்கப்படுவதும் பின் மாமனை நினைத்து வருந்துவதையும் பல தடவை பௌவ் கண்டிருக்கிறாள்.

வெட்கப்படும்போது கேலிசெய்யும் பேத்தி பின் அழும்போது பாட்டியை சிறு குழந்தையாய் சமாதானமும் செய்வாள்.

கமலேஷும் கனியும் கிளம்பிய சில நேரத்திற்கெல்லாம் உள்ளே நுழைந்தார் ஒருவர். அவரைப்பார்க wwE வரும் காளியைப் போல் திடகாத்திரமாக ஒருவன் வந்தான். அவன் வருவதைப்பார்த உடனே மனதில் சின்ன நடுக்கம் பரவியது அதை மறைத்து சோபாவின் கைபிடியை அழுத்தமாக பிடித்தவாறு அவன் வேறு எங்கோ பார்பாதாய் நடிக்க, வந்தவனோ.. ஈஷ்வர் ஐயா நீங்க தானா.... என் கண்ணை என்னாலேயே நம்ப முடியலையே என்று அவன் கைகளை பிடித்து அழுதேவிட்டான்.

அண்ணா ஏன் அழரிங்க என்று அவன் கேட்ட அவர் தன்னை கட்டுப்படுத்தி நம்பம்மா எதுவுமே சாப்பிடலையா அவங்களுக்கு பிடிச்சதா ஏதாவது செய்து தரலாமென்று தான் மார்கட் வரைக்கும் போய் வந்தேன்ங்க. உட்காருங்க ஆறஞ்சி சாரு எடுத்தாரேன் என்று அவன் கிளம்ப. அண்ணே கொண்டுவருவதை இரண்டா கொண்டாங்கள், மேலே என்று விரு வரு என்று படியேறி அவள் அரை வாசலை அடைந்தான். அது வரை அவளை பார்ப்பது எப்படி என்று வருந்தியவன். மின்னலென அவள் அறையை அடைந்தான்.

கதவின் கைபிடியை தொட்டவன் சற்று அமைதிக்காத்து ஏதோ யோசித்து பின் அந்தக் கதவின் நவீன தாழ்ப்பாலை திருப்ப அறை திறந்தது. அமைதியாக உள்ளே சென்றவன் தரையில் கிடந்த பௌவ்வியை பார்த்து மனதொடிந்து போனான். அவள் காலையில் எந்தப் புடவையை உடுத்திருந்தாளோ அதே புடவையில், அதே புடவை ஆனால் அப்படி ஓர் மாற்றம்.  கசங்கிய புடவையில் வதங்கிய மலராய் கிடந்தாள்.

அவளைக் கண்டவனின் கண்ணில்  உயிர்ரில்லாமல் போனது. அவள் இருந்த நிலை அப்படி. அவளை 4 மணிநேரத்திற்கு முன்னால் தான் பார்த்தேன் என்று அவனாலேயே நம்ப முடியாத தோற்றத்தில் . அழுது வீங்கியமுகத்துடன், உடலில் உயிர்மற்றும் விட்டு மற்ற அனைத்தையும் மொத்தமாய் உரிந்ததாய் ஒரு தோற்றம். அறைக் கதவை சாற்றிவிட்டு அவள் அருகில் நெருங்கினான்.

அவளை தன் இருகறங்கலால் ஏந்தியவன் அவளை கட்டிலில் கிடத்திவிட்டு குளியல் அறைக்குச் சென்று ஒரு டவலை நன்கு சுடுதண்ணீரில் நினைத்து அவள் முகம் கால் கை என்று சுத்தமாக துடைத்தான். அவள் அலமாரியை திறந்து அவளுக்கு உடையையும் மாற்றிவிட்டான். அவள் கூந்தலை சரியாக ஒதுக்கி கொண்டையிட்டு வைத்தான்.

பின் அறைக் கதவை திரந்து விட்டு அவள் அருகில் அமர்ந்த நேரம் கீழே பார்த்த ரெஸ்லிங் வீரன் வந்தான். ஆச்சரியம் என்னவென்றால் அவன் பெயரும் கொடிவீரனாம். அவன் பழ சாரை தர அதை வாங்கி கட்டில் அருகில் உள்ள மேஜையில் வைத்துவிட்டு, பௌவ்வியை எழுப்பி அவளை தன் மார் மீது சாய்த்து வைத்துக்கொண்டு ஆரஞ்சிசாரை முழுவதாக புகட்டினான். பின் அவள் வாயைத் துடைத்து முதுகில் தட்டி குழந்தையைப்போல் மடியில் படுக்க வைத்துக் கொண்டான்.

வீரன் அனைத்தையும் அமைதியாக பார்க்க, அன்ணா அவளுக்குக் கொஞ்சம் காய்ச்சல் இறுக்கு மருத்துவர் வருவாரா இங்கே என்றவன் கேட்க நொடியில் அதைச் செய்தார். அடுத்த 15 நிமிடத்தில் டாக்டர் அவளைப் பரிசோதித்து, உடம்பில் நீர் குறைந்ததால் இந்த நிலை ஊசி ஒன்று போட்டு ட்ரிப்ஸ் ஏத்தினால் சரியாகிவிடும் என்று கூர, ஊசியா என்று ஈஷ்வரும் வீரனும் ஒன்றாக அதிர்ச்சியாகினர்.

அடுத்த எப்பி கண்டிப்பா பெரிசாவும் ஃபுல் ரொமேன்ஸ்சா குடுக்க போரேன் .....

அதுவரை

என்றுமே உன் காதலி கண்ணமா

Episode # 09

Episode # 11

Go to Un manathil iruppathu naanum en kathalum mattume story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.