(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 28 - தேவி

Kaanaai kanne

ராணாவின் சிலை கிருத்திகாவினுள் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுத்தியது. நமக்கு மிகவும் தெரிந்த ஒரு நபரைப் பார்ப்பது போல் ஒரு எண்ணம். கனவுகளில் ராணாவை அடிக்கடி கண்டதால் அந்த உணர்வோ என்றும் தோன்றியது. அவள் அறியாமல் கண்களில் நீர் கோர்த்தது. உள்ளத் தவிப்போடு அவள் தடுமாறி நிற்கையில் ப்ரித்வி மகாராணா பற்றி விவரிப்பது கேட்டது. கிருத்திகாவும் அங்கே சென்று நின்றாள்.

ப்ரித்வி “பிரெண்ட்ஸ், இந்திய வரலாற்றில் மகாரானாவிற்கு மிக உயர்ந்த இடம் உண்டு. இந்தியா மொஹலாய படையெடுப்பில் ஒவ்வொரு ராஜ்யமாக இழந்து கொண்டு இருந்த நிலையில், ராஜபுத்ரர்களை அடிமைபடுத்துவது மட்டும் அவர்களால் இயலவில்லை. அதில் பெரும் பங்கு ராணா பிரதாப்பையே சேரும். ராணா ஆட்சி செய்த பகுதி உதய்பூர். அவரின் காலத்தில் சின்னதும் பெரிதுமாக பல போர்கள் முஹலாயர்களை எதிர்த்து நடந்து இருக்கின்றன. அதில் முக்கியமானது ஹடில்காடி போர் தான். அதில் ராணா தோற்றாலும், முஹலாய படைகளுக்கு மிகபெரிய சேதம் ஏற்பட்டது. அதன் பிறகு மக்களிடையும் மிகபெரிய எழுச்சி ஏற்பட்டது. ராஜபுத்திரர்களின் வாள், குதிரை இரண்டையும் மாற்றான் கைகளில் சிக்க விடமாட்டார்கள். அவரின் வாழ்நாள் முழுதும் கூட வந்த குதிரை சேத்தக். அந்த ஹடில்காடி போரின் போது பலமான காயம் அடைந்து சேத்தக் , தன் உயிரை விட்டது. அதன் நினைவாக ஒரு கல்லறை கூட கட்டினார் ராணா பிரதாப். இந்தியாவில் மன்னர்கள் காலத்து வீரத்திற்கு சான்று என்றால் முதலில் நினைவு வருவது ராஜபுத்திரர்கள் தான். இன்றும் தேசியப் பாதுகாப்பு படையில் அதிக அளவில் இடம் பெறுபவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களின் வீரமும், தியாகமும் நம் இந்திய மக்கள் அனைவரும் அறிய வேண்டியது அவசியம்.” என்று கூறவும், கேட்டுக் கொண்டு இருந்த மாணவர்கள் அனைவருக்கும் அது உண்மையே என்று தோன்றியது.

ரானாவைப் பற்றிய விவரங்கள் கொடுத்த பிறகு ப்ரித்வி அங்கிருந்த பாறைத் தோட்டம் சுற்றிப் பார்க்கச் சொல்ல, மாணவர்கள் அங்கே சென்றனர். ஜப்பானிய முறைப் படி அமைந்த அந்த தோட்டத்தில் ஒலி மற்றும் ஒளி வடிவில் ராஜபுத்திரர்களின் போராட்டங்கள் காட்சிப் படுத்தப் பட, எல்லோரும் அதைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தனர்.

ஸ்லைட் ஷோவிற்கு குரல் வடிவம் ஆங்கிலம், ஹிந்தி என்று இருக்க, கீழே சப் டைட்டில் ஆங்கிலத்தில் போடப்பட்டு இருந்தது.

ப்ரிதிவி, கிருத்திகா இருவரும் கடைசி வரிசையில் அமர்ந்து இருந்தனர். அந்த ஷோ பார்த்துக் கொண்டு இருந்த இருவருக்கும் ஏதோ ஏதோ என்ன அலைகள்.

கிருத்திகா தன் கனவோடு தொடர்பு படுத்தி ஒவ்வொரு இடமாக பார்த்துக் கொண்டு வர,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.