“ராணா பிரதாப் சிங், இளவரசி கிரண் தேவி.. & இன்னொரு நாட்டின் இளவரசன்” என்று கூற,
“செம. மேலே சொல்லு?”
“கனவில் வரும் இடங்கள் எல்லாமே ஒன்னு நாம போயிட்டு வந்த இடமா இருக்கும். இல்லை மறுநாள் போகப்போற இடமா இருக்கும். அதோட ரெண்டு தடவை என்னைக் கடத்த முயற்சி செய்தது, அந்த வில் வித்தை , வாள் சண்டை எல்லாமே கிரண் தேவிக்கும் நடக்குது உங்களுக்கு எப்படி என் விஷயங்கள் எல்லாம் கெஸ் பண்ண முடியுதோ, அதே மாதிரி கிரண் தேவி பற்றிய விவரங்களும் அந்த இளவரசருக்குத் தெரியுது”
“வாவ்” என்று மட்டும் சொல்லி நிறுத்த,
“ஹலோ, நான் என்ன உங்ககிட்டே பீட்பக் எமொஜியா கேட்டேன். வாவ், லைக்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க?”
“ஹேய்.. அப்படி எல்லாம் இல்லைமா. நீ சொல்றதக் கேட்கும்போது ஒரு சரித்திர நாவல் படிச்சா பீல் வருது”
“ம்ச்ச். போங்க சார். எனக்கு மண்டை குழம்புது”
“ஏன்?”
“ எனக்கு நடக்கிற ஒவ்வொரு விஷயங்களும் இளவரசி கிரண் தேவிக்கும் நடக்குது அல்லது அவங்களுக்கு நடந்த விஷயங்கள் எனக்கும் நடக்குது. இதைப் பற்றி என்ன நினைக்கன்னு எனக்குப் புரியலை”
“ஹேய். டோன்ட் பேணிக். நீ முழு விவரமும் சொல்லி முடி. தென் நான் பதில் சொல்றேன்” என்றான்.
கிருத்திகாவும் கனவில் நடந்த விஷயங்களும், நிஜத்தில் இவளைத் துரத்தி வருவதுப் பற்றியும் முழு விவரங்களும் கூறினாள்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட ப்ரித்வி,
“அந்த இளவரசர் யாரு? அவர் பேர் என்ன?” என்றுக் கேட்டான்.
“அவர் பேரு ப்ரித்விராஜ்ன்னு ஒரு தடவை வந்ததா நியாபகம். அவர் பிகானர் நாட்டு இளவரசர்”
என்றுக் கூறவும் , ப்ரித்விக்கு ஆச்சயர்யம் தாங்க முடியவில்லை. தன் பேரில் ஒருவன் அவளுக்குக் கனவில் வந்து இருக்கானே. அதைப் பற்றி இவள் சிறிதும் யோச்கிக்கவில்லையா? தெரிந்தோ தெரியாமலோ கிருத்திகா அவனை பிரின்ஸ் என்று அழைப்பது எல்லாம் தற்செயலாக நடந்ததா.இல்லை வேறு எதுவும் காரணம் இருக்குமா? என்று இப்போது பரிதவிக்கு மூளை குழம்பி விட, கிருத்திகாவோ அவன் அருகில் அமர்ந்து
“என்ன ஆச்சு ப்ரித்வி? என்றுக் கேட்டாள்.
அவளின் சலனமில்லாத முகத்தைக் கண்டவன், தன் சஞ்சலங்கள் எதுவும் காட்டாமல்,
“ஒன்னும் இல்லை கிருத்தி. நீ சொன்னதைப் பற்றிதான் யோசிச்சுட்டு இருக்கேன்” என்று மட்டும் சொன்னான்.
தொடரும்!
Go to Kaanaai kanne story main page
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.