(Reading time: 14 - 27 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

தொடர்கதை - காணாய் கண்ணே - 29 - தேவி

கிருத்திகாவின் கனவைப் பற்றித் தெரிந்ததும், முதலில் ப்ரிதிவிக்குத் தோன்றியது பெயர் ஒற்றுமைதான். ஆனால் அதை கிருத்தி உணரவில்லை என்றும் புரிந்து கொண்டான். அதற்கு மேல் அதைப் பற்றிச் சிந்திக்காமல், அவளின் கனவைப் பற்றிச் சிந்தித்தான்.

கிருத்திகா கூறியதில் , அந்தக் கனவு அவளுக்கு நடக்கும் நிகழ்வுகளை முன்னே நடந்தை நினைவுப் படுத்த முயற்சிப்பதாகத் தான் அவனுக்குத் தோன்றியது. ஆனால் சம்பந்தம் இல்லாமல் அவளுக்கு ஏன் ராணியைப் பற்றிக் கனவு வர வேண்டும். கனவில் வரும் இடத்தில் எல்லாம் இளவரசி கிரண் தேவி மற்றும் இளவரசன் ப்ரித்விராஜ் இருவரும் வாழ்ந்து இருக்கிறார்கள் அல்லது ஒன்றாகப் பயணம் செய்து இருக்கிறார்கள். தற்போது கிருத்தியும் அதே போல் பயணம் செய்கிறாள்.

இதே போல் யோசித்துக் கொண்டே வந்தவன், கிருத்தியிடம்,

“கிருத்தி, கிரண் தேவி பற்றி நீ ஏற்கனவே படித்து இருக்கிறாயா?” என்றுக் கேட்டான்.

“இல்லை பாஸ்”

“ஹ்ம்ம்.. நாம் வந்த இதே டூர் போல் ஏற்கனவே வந்து இருக்கிறாயா? அல்லது படித்து இருக்கிறாயா?”

“எங்க அப்பாவும், பெரியப்பாவும் ரொம்ப நல்ல நல்லவங்க பாஸ். அவங்களுக்கு கிடைக்கிற லீவ்லே சொந்தக்கராங்க வீட்டிற்குப் போய் விசாரிக்கத் தான் நேரம் இருக்கும். ஏதோ போனாப் போகுதேன்னு பக்கத்தில் எங்கியாவது கூட்டிட்டுப் போவாங்க. சோ நான் தமிழ் நாட்டு பார்டர் தாண்டாத பைங்கிளி”

அவளின் விவரிப்பில் சிரிப்பு வர, புன்முறுவலோடு

“நல்லாத்தான் பேசற. அது இருக்கட்டும். இப்போ இந்தக் கனவைப் பற்றி என்கிட்ட ஏன் சொன்ன?”

“இதுவரை எங்க வீட்டில் செல்லம் கொஞ்சிக்கிட்டு சில டிசிப்ளினுக்கு டாட்டா காட்டிடுவேன். அதுக்கு ரெண்டு திட்டு விழும். அவ்ளோதான். மற்றபடி எனக்கு எங்க வீட்டில் ரொம்ப சப்போர்ட். நான் தைரியமாத் தப்ப தட்டிக் கேட்டப்போ எனக்குதான் ஆதரவா இருப்பாங்க. அப்படிப்பட்டவங்க எனக்குப் ஷேடோ போடற அளவிற்கு வந்துருக்காங்கன்னா, பிரச்சினை பெரிசுன்னுப் புரிந்தது. அதான் எனக்குத் தெரிந்ததை உங்ககிட்ட சொல்லிடனும்னு நினைத்தேன்”

“ஹ்ம்ம். நீ சொல்றதைக் கேட்டப்பிறகு எனக்கு குழப்பமா இருக்கு. கனவில் வர நிகழ்ச்சிகள் உனக்கு ஏதோ இன்சிஸ்ட் பண்ணுதா அல்லது வெறும் கனவு மட்டும் தானான்னு புரியலை. ஆனால் நீ எங்கிட்ட சொன்னது ஒருவகையில் நல்லதாப் போச்சு. என்னோட கணிப்பு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.