(Reading time: 14 - 27 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“பண்ணலாம். பட் இது ஹிஸ்டரி சம்பந்தப் பட்ட டூர் இல்லையே. ஆர்கிடெக்ட் சம்பந்தப் பட்டது. இதில் ஹிஸ்டரி பற்றி டிஸ்கஸ் பண்ண என்ன இருக்கு?”

“எங்கப் படிப்புக்கு தேவையில்லாதது என்றாலும், பொது அறிவு வளர்துக்கறது தப்பில்லையே சார்”

“ஹ்ம்ம். நல்ல விஷயம் தான். சரி. ஒன்னு பண்ணலாம். உங்க சந்தேகங்கள் அல்லது கேள்விகளுக்கு நான் பதில் சொன்னா அது ஒரு பக்கமா போக வாய்ப்பு இருக்கு. அதனால் இத ஒரு டிபெட்டா மாற்றிடலாம். நீங்களே பேசுங்க. ஒருத்தர் கேள்வி கேளுங்க. அதில் மற்றவர் பார்வை என்னனு தெரிஞ்சிக்கோங்க. அப்போ உங்களுக்கே சில தெளிவுகள் கிடைக்கும். ஒன்னு மட்டும் சொல்றேன். இது எல்லாமே கடந்த காலம். அந்தக் காலத்து நடைமுறைகளில் உள்ளது. அதை எந்த விதத்திலும் இப்போ பொருத்திப் பார்த்தால் , மிகவும் கொச்சையாத் தெரியும். சோ அதை மட்டும் செய்யமால், இத ஒரு டிபெட்டா நடத்திக்கோங்க. ஒரு அரைமணி நேரம் எடுத்துக்கலாம். “ என்று வாட்ச் பார்த்துக் கொண்டே கூறினான்.

இதைக் கேட்டு மேலும் சில மாணவர்களும் அங்கே சேர்ந்து கொள்ள ராகவி ஆரம்பித்தாள்.

“பர்ஸ்ட் கேக்கனும்னு நினைச்சது, அந்த உடன்கட்டை பற்றிதான். அது எப்படி ஒரு மனைவி இறந்தால், ஆண் இன்னொரு திருமணம் செய்யலாம். ஆனால் பெண் மட்டும் உடன்கட்டை ஏற வேண்டுமா? இது என்ன நியாயம்?”

எல்லோருக்குமே இந்த எண்ணம் இருந்ததால், இதை ஆதரித்து கேள்விகள் கேட்டனர். ஆனால் பதில் ஒருவருக்கும் சொல்ல முடியவில்லை. இதுவே சற்று நேரமாகப் பேசிக் கொண்டிருக்கவும், ப்ரித்வி பதில் சொன்னான்.

“பிரெண்ட்ஸ். இதுக்கு பதில் நான் சொல்றேன். ஆனால் அந்தக் கால கட்டத்தில் இருந்த நடைமுறைப் பற்றி எனக்கு உள்ள புரிதல் மட்டும் தான். நான் அதை ஆதரிக்கிறேன் என்பது கிடையாது.

மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பெண் எந்த அளவிற்குத் தெய்வமாகப் போற்றப் படுகிறாளோ, அதே அளவில் அவளை மெல்லியள் என்ற வகைப் படுத்தலும் இங்கே தான் அதிகம். அவர்களைப் பாதுகாக்கவே ஆண்கள்  இருப்பதாக நம் சமூகத்திற்குள் ஒரு எண்ணம். புராண காலங்களாக இருந்தாலும் சரி, பிற்காலமாக இருந்தாலும் சரி. பெண்களைப் போரில் ஈடுபடுத்துவதில்லை. அதேப் போல் அவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் வசதிகள் செய்து கொடுத்தப் பின்பே இரு நாடுகளின் போர் என்பது இருக்கும். எனக்குத் தெரிந்து அது வடக்கில் குப்தர்களானாலும் சரி, கடைக் கோடி பாண்டியர்களானாலும் சரி. அதைதான் பின்பற்றினார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.