(Reading time: 14 - 27 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

போரின் வெற்றித் தோல்வியில் தேவைபப்ட்டால் எதிரி நாட்டுப் பெண்ணை மணந்து கொண்டனர் வெற்றி பெற்ற அரசர்கள். அதனால் அவர்களைக் கீழாக எண்ணும் நிலைமை இல்லை. ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்று எல்லாம் இல்லை. அந்தக் காலக் கட்டத்தில் உடன்கட்டை ஏறுதல் இருந்ததாகத் தெரியவில்லை.

கைபர் கனவாய் வழியாக வந்த அரேபிய மக்களின் வழி முறை அது அல்ல. அவர்கள் பெண்களையும் போரில் வெற்றிப் பெற்றப் பொருளாகவே பார்க்கத் தொடங்கினர். மேலும் அவர்களின் முரட்டுத்தனம் நம் இந்திய பெண்களுக்குப் பொருந்துவதும் கடினம். அதனால் அவர்களுக்குள் யோசித்துக் கண்டுப் பிடித்த வழிதான் இந்த உடன்கட்டை ஏறுதல் என்று தோன்றுவதுண்டு. அதைத் தடுக்காதது ஆண்களின் சுயநலம் அல்லது பெண்களைத் தனக்குக் கீழாகப் பார்க்கும் எண்ணம். இதனால் தான் இந்தப் பழக்கம் வந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம் “

கேட்டுக் கொண்டிருந்தவர்கள் , இதை ஒத்துக் கொள்ள முடியாவிட்டாலும், வேறு விளக்கங்களும் தோன்றவில்லை என்பதால் மெளனமாக இருந்தனர்.

இப்போது வேறு ஒரு பெண் எழுந்து ,

“சரி சார். மகாராணா என்றுப் போற்றிக் கொண்டாடும் இவர் , ஒட்டுமொத்தமாக பெண்கள் தீக்குளிக்க எப்படிச் சம்மதித்தார். அப்படின்னா, அவரும் பெண்களைக் கீழாக நினைத்தார் என்பது தானே அர்த்தம்” என்றுக் கேட்டாள்.

அப்போது கிருத்தி எழுந்து “ இல்லை ராதிகா, இதற்கு நான் விளக்கம் சொல்கிறேன்” என்றாள்.

“இதைப் பற்றி ஒருமுறை ராணாவின் சகோதரனின் மகள் கிரண் தேவி ரானாவிடம் விளக்கம் கேட்கிறாள். “ என்று ஆரம்பித்தவள் குரல் மாறியது”

ஒருமுறை ராணாவோடு படை சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, கிரண் தேவி அந்த படை முகாமில் தங்கி இருந்தாள். அப்போது ராணாவின் புதல்வன் அமர்சிங், இரு குதிரைகள் பொட்டிய ஒரு மூடு வண்டியை ராணாவின் படை முகாமிற்கு அழைத்து வந்தான்.

“அமர்சிங், வண்டியில் யார் இருக்கிறார்கள்?” என்று வினவ,

“தந்தையே, நம் எதிரியின் தளபதி அப்துர் ரஹீமின் மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களை வைத்து அப்துர் ரஹீமை நம்மிடம் சரணடைய வைத்து விடலாம்” என்றுக் கூற,

“நீ எல்லாம் ஒரு வீரனா? எதிரிகளை நேருக்கு நேர் சந்திப்பதை விடுத்து, ஒன்றும் அறியாத அப்பாவிப் பெண் பிள்ளகைள் பின்னால் ஒளிந்து கொள்வாயா?” என்றுக்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.