(Reading time: 14 - 27 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“இதற்குத் தீர்வு தான் என்ன தந்தையே? இனியும் இது தொடருமா?”

“இல்லை தேவி. அதை மாற்றத் தான் முயல்கிறேன். நம் மக்களின் முக்கிய பயமே பாதுகாப்பின்மை தான். அதற்கு தான் நம் உதய்பூர் ராஜ்ஜியத்திற்குள் கணவனை இழந்தப் பெண்களுக்கு சொத்துரிமையும், அவர்களிடத்தில் தவறாக நடப்பவர்களுக்கு மரண தண்டனையும் தீர்மானித்து வைத்து இருக்கிறேன். மேலும் பெண்களுக்கும் போர் பயிற்சிகள் , தற்காப்பு பயிற்சிகள் கொடுக்கப் படும்.  நான் மீண்டும் நாட்டிற்குள் சென்றவுடன் இதை நிறைவேற்றி விடுவேன்”

“நல்ல யோசனை காகூ. தங்களின் எண்ணம் நிறைவேறி விட்டால், ராஜபுத்திரப் பெண்கள் இனி தலை நிமிர்ந்து நிற்பார்கள். அவர்களின் பாதுகாப்பிற்கும் அஞ்ச வேண்டியது இல்லை தான்.“ என்று அவள் கூறி முடிக்கும் போது அவள் கண்களில் கோபக் கனல் ஒன்றும் வெளிப்பட்டது.

இதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு சரியாகத் தான் தோன்றியது. எல்லோருமே அவள் சொன்னக் கதையில் மூழ்கி இருந்ததால், அவளையோ, அவள் குரல் மாற்றத்தையோக் கவனிக்கவில்லை.

ஆனால் ப்ரித்வி கண்டுபிடித்து விட்டான். இது இவள் குரல் இல்லையே. அத்தோடு பேசும் விதமும் சரி இல்லையே என்று ஊன்றி அவளைப் பார்க்க, அவள் கண்களில் தெரிந்த கனலில், அவனுக்குக் கிரண் தேவி நினைவு வந்தாள். கிருத்திகாவாக கனவுப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்தக் கிரண் தேவி எப்படி இருப்பாள் என்ற எண்ணம் உள்ளூர ஓடிக் கொண்டு இருந்தது.

இப்போது கிருத்தியின் முகத்தில் தெரிந்த அந்தப் பாவனையில் ப்ரித்வி மனதிற்குள்

“அம்மாடியோ , இவளைப் பார்த்தாதான் முழுசா மாறின சந்திரமுகி மாதிரி, கிரண் தேவியா மாறின கிருத்திகா மாதிரி இருக்காளே. இது எங்கே போய் முடியும்னு தெரியலையே” என்று கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டு இருந்தான்.

மற்றவர்கள் காணும் முன், சட்டென்று

“பிரெண்ட்ஸ், கிருத்திகா சொன்னதைப் பற்றி என்ன நினைக்கறீங்க?” என்று உரத்தக் குரலில் கேட்கவும், கிருத்திகாவும் கனவில் இருந்து கலைந்தாள.

ராகவியோ “இதுவும் சரிதான். ஆனால் அப்படி நம்மவர்கள் இருந்து இருக்காங்க என்பதும் ரொம்ப வருத்தமா தான் இருக்கு” என்றுக் கூறவும், மற்றவர்களும் ஆமோதித்தனர்.

“உண்மைதான். ஆனால் அந்த அந்த காலக் கட்டத்தில் சரியாகத் தோன்றிய விஷயங்கள் பின்பு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.