நிலாவும், ரகுவும் தனியாக பேசுவதற்காக கிளம்பும் வேலையில், சங்கரின் phone அடிக்க, அதை அவர் எடுத்து பேசினார்.
எதிர் முனையில் பேசியவர் எதோ கூற, பதற்றம் ஆனார் சங்கர் “என்ன மச்சான் சொல்றீங்க, எப்போ”.
“இப்ப எப்படி இருக்காங்க” என்றார் சங்கர் கைபேசியில். அவர் பதற்றமாக பேசுவதை அந்த அறையில் இருந்த அனைவரும் கவனித்தனர். நிலாவும் ரகுவும் மாடிக்குப் போவதை நிறுத்திவிட்டு சங்கர் பேசுவதைப் பார்த்தனர்.
எதிர் முனையில் பேசிய மற்றவருக்கு கேட்கவில்லை.
“சரிங்க மச்சான், நாங்க உடனே கிளம்பி வரோம்” என்று கூறி போனை கட் செய்துவிட்டு, சிவகாமியை பார்த்து “அம்மாக்கு மறுபடியும் seriousஆம் ICUல admit பண்ணிருக்காங்களாம்” என்று அவர் கூறும் போதே சிவகாமி கண்கள் கலங்கியது. அதை பார்த்து நிலாவும் உடனே ஓடிச் சென்று தன் தாயை அனைத்துக் கொண்டாள்.
சங்கர் தர்ம சங்கடத்தோடு நாகராஜன் குடும்பத்தைப் பார்க்க, “சம்பந்தி, நீங்க உடனே கிளம்புங்க. இந்த விசேஷத்தை நாம இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்” என்று புரிந்து கொண்டவராய் பதில் கூறினார் நாகராஜன்.
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, நிலா பக்கம் திரும்பி “நிலா cab book பண்ணுடா” என்றார் சங்கர்.
நிலா தன் mobileஐ எடுக்க தன் அறை நோக்கி நடக்க, “இருமா நிலா” என்று நிறுத்தினார் நாகராஜன். அனைவரும் அவர் எதற்கு அப்படிச் சொல்கிறார் என்று அவரை பார்க்க “ரகு, நாங்க cab book பண்ணி போய்க்கிறோம், நீ இவங்கள மருத்துவமனையில் drop பண்ணிடு” என்றார் நாகராஜன். ரகுவும் எதுவும் யோசிக்காமல் சரிங்கப்பா என்றான்.
“இல்ல சம்பந்தி எதுக்கு உங்களுக்குச் சிரமம். நாங்க பார்த்திக்கிறோம்” என்று அவர்களைச் சிரமப் படுத்த வேண்டாம் என்பதை மனதில் வைத்துக் கூறினார் சங்கர்.
“இதில் ஒரு சிரமமும் இல்லை. அம்மா கு ஒன்னும் ஆகாது. நீங்க முன்னாடி போங்க நாங்க கொஞ்ச நேரத்தில் வரோம்” என்று சங்கரிடம் ஆறுதலாகப் பதில் கூறி முடிப்பதற்குள் “அப்பா உங்களுக்கு cab book பண்ணிட்டேன், உங்க Phoneகு message வந்திருக்கும். இப்ப cab வந்துடும்” என்று நாகராஜனை பார்த்துக் கூறிவிட்டு “uncle வாங்க போலாம், எந்த hospital” என்றான் ரகு.
அனைவரும் அவன் வேகத்தை ஆச்சிரியமாகப் பார்த்தனர். ஒரு பதட்டமான சூழ் நிலையிலும் வேகமாகவும், அக்கறையோடு யோசித்தும் செயல் பட்டிருக்கிறான்,
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Enakum therila Abimahesh, epo pesuvanganu.... Thanks for your comments.
Thanks adharvjo for your comments.
Thanks for your comments and feedback Madhumathi