(Reading time: 10 - 19 minutes)
Kipi to kimu
Kipi to kimu

தொடர்கதை - கிபி டு கிமு - 09 - சுபஸ்ரீ

டியர் கிமு,

கண்டுபிடிச்சிட்டேன்

கண்டுபிடிச்சிட்டேன்

கண்டுபிடிச்சிட்டேன் . .

லெட்டர் எழுதியவன கண்டுபிடிச்சிட்டேன்.

மீ சோ ஹேப்பிடா . . .(ஹேப்பி ஸ்மைலி . . டேன்சிங் ஸ்மைலி)     

ஓ காட் நம்பவே முடியல.

விஷயத்த சொல்லாம டேன்ஸ் ஆடாதேனு . . நீ கடுப்பாகற எனக்கு தெரியுது (கண்ணடிக்கிற ஸ்மைலி) . .

ஹ ஹ ஹா. ஆனா  என் சந்தோஷத்த கண்ட்ரோல் பண்ண முடியலடா.

கொசுவர்த்தி சுருள் உன் முன்ன வெச்சுக . . அட அதான் பிளாஷ் பேக் சொல்ல போறேன் . .

சரவணன் ஊர்ல இருந்து வந்ததும் அவன பாக்க போனேன். தனியா போலாம்னு இருந்தேன். ஆனா என் தம்பி கூட வருவேன்னு ரகளை. வேற வழி இல்ல . . சந்திர மண்டலத்துக்கே பெண்கள் தனியா போறாங்க. ஆனா என் நிலைமை தெருல தனியா நடக்க முடியல. தலைவிதி (தலையில் அடித்துக் கொள்ளும் ஸ்மைலி) பளஸ் என்னோட மினி மளிகை பேக்.

சரவணன்கிட்ட லெட்டர் காட்டினேன். அவன் திமிர் கிண்டல் தெனாவட்டு எல்லா கலந்த லுக்கோட “ஆமா நான் தான் எழுதினேன்னு” பதில் சொல்றான்.

என் தம்பி செம டென்ஷன் ஆகிட்டான். அவன அடிக்க போயிட்டான்.  கொலவெறி மோட்ல இருக்கான். எனக்கு என்ன செய்யறதுனே தெரியல. . .“என்கிட்ட ஏன் சண்டைக்கு வர்ற? . . எழுத சொன்னவன்கிட்ட சண்டைக்கு போனு” என் தம்பிகிட்ட நக்கலா கேக்றான்.

“யார் எழுத சொன்னது கேட்டா? சொல்லவே மாட்டேங்கறான்.

அவன் பொய் சொல்லி விஷயத்த டைவர்ட் பண்றானுதான் தோனிச்சி. நிறைய தடவை கேட்டு சண்ட போட்டதும்  கொஞ்சம் அடங்கினான். பேரும் சொன்னான்.

அவனை இதை எழுத சொன்ன ஆள் பேரு கேட்டதும் . . சத்தியமா எனக்கு ஹார்ட் அட்டாக் வராத குறைதான் போ. ஈரேழு பதினாறு லோகத்துல இப்படி ஒரு ஜென்மம் இருக்கிறதே எனக்கு நினைவு இல்லபா. அந்த ஆத்மா எனக்கு எழுத சொல்லியிருக்காம்.

சரவணனை லெட்டர் எழுத சொன்னது ஸ்ரீகாந்தாம். இது யாரு தெரியுமா என்னோட பிரெண்ட் ஷர்மிளா சொன்னேன் இல்லயா? அவளோட தம்பி.

செகண்ட் இயர் பி.டெக் படிக்கிறான். என்னைவிட ஒரு வருஷம் சின்னவன். அவன் ஸ்கூல் படிக்கறப்ப “அக்கா அக்கானு” என் பின்னாடி சுத்துவான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.