(Reading time: 10 - 19 minutes)
Kipi to kimu
Kipi to kimu

மாதிரி படி

“ஸ்ரீகா எப்படிடா இருக்கே?“ வேணுனே டா போட்டேன் . .

“ம்ம் நல்லா இருக்கேன்” சொன்னான் . . . “பதில்ல அக்கா மிஸ்ஸிங்”

“காலேஜ் லைப் எப்படி போகுது?”

“குட்” விட்டேத்தியா பதில் . . இன்னமும் கிறுக்கல் . . தலை நிமிர்ந்து என்னை பாக்கல

“சரவணன் உன்ன ரொம்ப விசாரிச்சான்” நான் சொன்னதும் சட்டுனு என்னை நிமிர்ந்து பார்த்தான். என் கையில அந்த லெட்டர் அதையும் பார்த்தான்.

திரும்பி ஷர்மிகிட்ட “எங்களுக்கு டீ போட்டுக் கொண்டுவா” சொன்னான். எனக்கு அப்போ டீ வேண்டாதான் ஆனா அவன் தனியா பேச விரும்புறானு புரிஞ்சது. அதனால சும்மா இருந்தேன். ஷர்மி உள்ள போனதும்.

“நான்தான் சரவணன விட்டு எழுத சொன்னேன்” அப்படியே சரண்டர் ஆயிட்டான் பயபுள்ள

“கிறுக்கல்?”

“நான் சரவணனோட பேசிட்டு இருந்தேன். எனக்கு இப்படி கிறுக்கிற பழக்கம் எப்பவும் உண்டு. . அப்போ உன்ன தெருவுல பாத்தேன் . .உடனே சரவணனை அப்படி எழுத சொல்லி . . அத உன்கிட்ட சேர்க்க வெச்சேன்”

“எதுக்கு எனக்கு லெட்டர்?”

”நான் உன்ன லவ் பண்றேன் . . அதான்”

“லவ்வா? உன் வயசென்ன என் வயசென்ன?”

“ஏன் சச்சின் அஞ்சலி இல்லயா தனுஷ் ஐஷ்வர்யா இல்லயானு?” கூலா சொல்றான். இவன என்ன பண்றது.

“உன் அப்பா அம்மா பர்த்டே என்னிக்கு?”. . .“ரேஷன் கடல சக்கரை என்ன விலை?  உங்க அம்மா மாசா மாசம் வாங்கிட்டு வருவாங்கல சொல்லு?” . . ஒரு கிலோ தக்காளி என்ன விலை?”

பேந்த பேந்த முழிச்சா பாரு . .

“அம்மா அப்பா பத்தி தெரியாது . . உன் வீட்டு கஷ்ட நஷ்டம் தெரியாது . . இதுல சினிமா கிரிக்கெட் காரங்க மொத்த ஜாதகமும் மனப்பாடம் இல்லயா?“

“அறிவில்ல அக்கா அக்கானு கூப்பிட்ட . . இப்ப லவ் லெட்டர் தரயே . . உன்னை என்ன செய்யறது. இப்ப இது ஒரு பேஷன் அண்ணா அக்கானு கூப்பிடறது அப்புறம் லவ் பண்றது” கோபத்துல பக்கத்துல இருந்த ஹிண்டு பேப்பர சுருட்டி அடிக்கவே போயிட்டேன்..

அவன் கொஞ்சம் கூட அசராம சிரிக்கிறான். என் கையில இருந்த ஹிண்டுவ பிடுங்கி. “கூல்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.