(Reading time: 10 - 19 minutes)
Kipi to kimu
Kipi to kimu

கூல் பிரியா அக்கா”

அவன் வாய்ல இருந்து அக்கான்ற வார்த்தை கேட்டதும் இப்ப பே னு முழிக்கிறது என்னோட டேர்ன் போல

“ஷர்மி மாதிரி நீயும் எனக்கு அக்காதான் பிரியா . . கூல் . . ரிலாக்ஸ்னு” சொல்லி என் கையில் டீ கப்பை திணிச்சான்.

“இந்த லெட்டர் எதுக்கு?“  . . இன்னமும் என் கோபம் குறையல

ஷர்மியை பார்த்து உட்காரு என ஜாடை செய்தான். என் அருகில் அவள் அமர அதே சமயம் சரவணன் அவன் தம்பி விமல் . . என் தம்பி எல்லாரும் வந்து அங்க சேர்ந்தாங்க.

சரவணனும் ஸ்ரீகாவும் சிரித்தபடி ஹை-பை கொடுக்கிட்டாங்க. என்னடா நடக்குது இங்கனு மிச்ச குழப்பத்தல குழம்பி இருந்தேன். “சரவணா உன் மெசேஜ்”னு அவனுக்கு காட்டி கண்ணடிச்சான்.

“அக்கா நாங்க ஒரு டீம்மா தெருகூத்து நடத்தறோம் . . . அதுல ஒரு டயலாக் தான் இது. அன்னிக்கு நானும் சரவணனும் டிஸ்கஷன்ல இருந்தோம் அப்ப எழுதினதுதான் இது. நான் எப்பவும் போல கிறுக்கினேன். சரவணன் பேப்பர் பிடுங்கி பின்னால இதை எழுதினான். ஸ்டோரில டிவிஸ்ட்  . .  அதை மறந்துப் போகாம இருக்க எழுதினான்.”

“ஷர்மி நோட் நினைச்சிட்டு உங்க நோட்ஸ்ல வெச்சிட்டேன். அது           உங்களுக்கு வந்திருச்சி. அவ்வளோதான்” சிம்பில்லா முடிச்சிட்டான்.

இதை வெச்சி இத்தன வாரமா நான்பட்ட அவஸ்தை அவனுக்கு புரிய வெச்சபோது. விழுந்து விழுந்து சிரிக்கிறான். கொய்யால எனக்கு என்ன கோபம் தெரியுமா?

சரவணன் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.

“தெருக்கூத்து பத்தி சொல்லுடா? இது எப்ப இருந்து?” இது ஷர்மி

“அக்கா இயல் இசை நாடகம் மூணு வகைய இருந்தது எல்லாருக்குமே தெரியும். இதுல நாடகம் தான் கூத்து. இப்ப இது அழியும் தருவாயில இருக்கு. அதனாலதான் எதோ எங்களால முடிஞ்ச அளவு அதை மீட்டெடுக்க ஒரு முயற்சி.”- ஸ்ரீகா

“தெருக்கூத்து கலைஞர்கள் ரொம்பவும் கஷ்ட நிலையில இருக்காங்க. அவங்களுக்கும் இது உதவியா இருக்கும். தெருக்கூத்து நம் பாரம்பரியம் கலாசாரத்தை கொண்டு இருக்கு. கிராமத்தின் மண்வாசனை கிராம மக்களின் வாழ்வையும் எடுத்துச் சொல்லும் தெருக்கூத்து” இது சரவணன்

நான் அசந்தே போயிட்டேன் கிமு. எதோ சின்னபசங்க விளையாட்டுதனமா இருக்காங்னு நினைச்சேன். ஆனா சூப்பர்பா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.