(Reading time: 10 - 19 minutes)
Kipi to kimu
Kipi to kimu

சரவணன் சொன்னத நம்பவும் முடியல . . நம்பாம இருக்கவும் முடியல . . சரவணன் தம்பி விமல்கிட்ட விஷயத்த சொல்லி அவன் எஸ்கேப் ஆகாம இருக்க பாத்துக்க சொன்னேன். ஏனா பொய் சொல்லி இருந்தா இவன திரும்ப பிடிக்கணுமே.

பாலுக்கு பூனைய காவல் போட்ட மாதிரி சரவணனுக்கு அவன் தம்பிய காவல். ஆனா சரவணன் தம்பி விமல் நல்ல பையன். அதனால தைரியமா போனேன்.

பாவம் விமல் ஆயிரம் தடவை என்கிட்ட சாரி கேட்டான். பரவாலடானு சமாதானம் படுத்தினேன். ஷர்மிய பாக்க போனேன்.

இப்ப டைரக்டா ஷர்மிகிட்ட கேட்க முடியாது. அவ என் க்ளோஸ் பிரெண்ட். அதுவும் இல்லாம சரவணன் பொய் சொல்லி இருந்தா என்ன ஆகும்?

அதனால என் மனசுலயே செயற்குழு கூட்டம் பொதுக்குழு கூட்டம் எல்லாம் நடத்தி ஒரு வழியா ஷர்மி வீட்டுக்கு போகலாம்னு தீர்மானம் நிறைவேத்திட்டேன். நான் மட்டும் சும்மா போகற மாதிரி போனேன். அவ தம்பியும் வீட்ல இருந்தான்.

அங்க போனதும் எனக்கு எப்படி விஷயத்த ஸ்டார்ட் பண்றதுனே தெரியில . . ஆரம்பத்துல ஷர்மிகிட்ட சம்பந்தமில்லாத விஷயங்கள ததகா பிதகானு பேசி சொதப்பினேன். என்னை பத்திதான் உனக்கு தெரியுமே.

எப்படி கேட்கறதுனு தயங்கின போது ஸ்ரீகா ஜாலியா உலாத்திட்டு இருந்தான். அவன் பாடி லேங்வேஜ் பாத்தே தெரிஞ்சிட்டு அவன்தான் எழுதியிருக்கான்னு. எல்லா கொலஸ்ட்ரால் செய்ற வேல.

இப்ப அவன்கிட்ட கேட்டு . . . அவன் இல்லனு சொல்லிட்டா அடுத்த ஸ்டெப் என்ன?

எதுவும் பிளான் பண்ணி செய்யணும். அவசர குடுக்க மாதிரி வந்துட்டேனோ. செயற்குழு கூட்டம் வேஸ்ட் ஆகிடுச்சோனு ஒரு குழப்பம் மண்டையில ஒடுது. ஐயோ அப்ப என் மூஞ்சிய பாக்கணுமே. 23ஆம் புலிகேசி போருக்கு போற மாதிரி.

வேற வழி இல்லாம உலகத்துல இருக்கிற எல்லா சாமியை வேண்டி . . டைரக்ட் அட்டாக் பண்ணேன்.

ஸ்ரீகா சோபால உட்கார்ந்து ஒரு கைல செல்போன். மறு கைல பக்கத்துல இருக்கிற பேப்பர்ல ஸ்டிக் மேன் சர்கிள் சர்கிளா கோணல் மானலா கிறுக்கிட்டிருந்தான்..

லெட்டர் பின்னாடி கிறுக்கல் இருக்குனு சொன்னேன் இல்லயா? அதான் டூடுல்ஸ் அது மாதிரி. அதை பாத்ததும் கன்பார்ம் ஆயிடுச்சி.

அவன்கிட்ட பேச்சுக் கொடுத்தேன். நாங்க பேசினத அப்படியே எழுதறேன். கதைல படிக்கிற

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.