(Reading time: 10 - 19 minutes)
Kipi to kimu
Kipi to kimu

நாளைக்கு நாங்க தெருக்கூத்து கலைஞரை பார்க்க போறோம் வரியானு கேட்டான். உடனே சரி சொல்லிட்டேன்.

அடுத்த நாள் அவரைப் போய் பார்த்தோம். வறுமையின் காரணமா அவர் கட்டிட தொழிலாளியா இருக்கார். என் சந்ததிக்கு தெருக்கூத்து வேண்டாம்னு அவரே சொல்றார்னா பாத்துகோ.

இன்னிக்கு சினிமா ரேடியோ நெட் இதெல்லாம் தெருக்கூத்தை மொத்தமா முழிங்கிடுச்சி. இப்போ தெருக்கூத்து கலைஞர்கள்னு தனியா எங்கயுமே இல்ல. அவர் நிறைய சொன்னார்.

தமிழர்களின் பழங்கலைகளில் ஒன்று தெருக்கூத்து. இதில் கதை சொல்லல், நாடகம், ஆடல், பாடல் என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் இருக்கும். இதில் இதிகாசங்களை கதையாக்கி நடத்துவது ஆரம்ப காலத்தில் இருந்தது. காலப் போக்கில் சீர்திருக்க கதைகள் விழிப்புணர்வு கதைகள் என பல சேர்க்கப்பட்டன.

பல்லவ அரசன் பரமேசுவர வர்மன் வாதாபி மீது படையெடுத்துச் சென்ற காலத்தில்  இவ்வழக்கம் உண்டாயிற்று என்கிறார்கள். போர்க் குணத்தை உருவாக்க அதற்கு தகுந்த பாரதக் கதைகளை கோயில்களில் பேசி நடித்து மக்கள் இடையே நாட்டுபற்று நல்லொழுக்கம் போன்றவற்றை ஏற்படுத்த ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக மானியம் வழங்கப்பட்டதாக கல்வெட்டுகளில் உள்ளன.

கூத்து நடைப்படும் இடத்தின் பெயர் களரி ஆகும். கோயில் நிலம் அல்லது அறுவடை ஆன வயல் அல்லது பெரிய திடல்களின் நடுவே நடக்கும். கூத்து ஆடுபவர் பெயர் கூத்தர். வீட்டின்னுள் நடப்பது பெயர் அகக்கூத்து. வெளியே நடப்பதின் பெயர் புறக்கூத்து.

இப்படி நிறைய விஷயங்கள அழகா சொன்னார் கிமு. வாழ்க்கையில நாம ரொம்ப அரிதான அழகான விஷயங்களை மிஸ் பண்றோமோனு தோணுது. இவரையே குருவா ஏத்துக்கிட்டு நாங்க இப்ப கூத்துப்பட்டறையில கூத்து கத்துக்கிறோம்.

ஸ்ரீகா சரவணன் ஷர்மி விமல் என் தம்பி நாங்க எல்லாரும் உங்க இல்லத்துக்கு வந்து தெருக்கூத்து நடத்தப் போறோம். பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு சமந்தமான விழிப்புணர்வு கூத்தும் நடத்த இருக்கோம்.

இதிகாச கதைகளை எல்லாருக்கும் புரியும்படி கூத்துல இடம்பெறும். நிறைய ஐடியாஸ் இருக்கு. அங்க உன்கிட்ட சொல்றேன். நீயும் எங்க டீம்ல ஜாயின் பண்ணு கிமு.

இன்றைய நிலையில் அநேகமாக மறைந்தும் மறந்தும் போனது கடிதம். கடிதம் எழுதுதல் என்பது ஒரு அனுபவம். அதில் உணர்வுகள் கைஎழுத்து மூலம் பிரதிகளிக்கும் என்பதை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.