(Reading time: 11 - 22 minutes)
Enakena yerkanave piranthavan ivano
Enakena yerkanave piranthavan ivano

பயந்து போயிட்டாங்க. இப்போ ரெண்டு நாளா, பேத்தி கல்யாணத்தைப் பார்க்காமல் போயிடுவேனோனு ரெம்ப புளம்புறாங்கஎன்று கவலையோடுக் கூறி நிறுத்தினார் சங்கர்.

அதைக் கேட்கும் போது அனைவருக்கும் வருத்தமாக இருந்தது.

வயது ஆகிட்டாலே அவங்க சின்ன குழந்தை மாதிரிதான். நாமதான் அவங்கள கவனமா பார்த்துக்கனும்என்றார் நாகராஜன்.

புரியிது சம்பந்தி. இப்போ உங்ககிட்ட ஒரு உதவி கேட்கலாம்னு வந்திருக்கோம்என்று தயக்கத்தோடு பேச்சை நிறுத்தினார் சங்கர்.

என்ன விஷயமுனு தயங்காம சொல்லுங்க சம்மந்திஎன்றார் நாகராஜன்.

அது வந்துஎன்று சிவகாமியை ஒருமுறை பார்த்துவிட்டுநிலா ரகு கல்யாணத்தைக் கொஞ்சம் சீக்கிராமா நடத்திடலாமா சம்பந்திஎன்றார் சங்கர்.

நாகராஜனும் பானுமதியும் இதை எதிர் பார்க்கவில்லை. உடனே என்ன சொல்வது என்று தெரியவில்லை அவர்களுக்கு. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

சங்கரும் சிவகாமியும் இதை எதிர் பார்த்ததுதான். அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் இதைப் பற்றிப் பேசும் போதே ஆளுக்கு ஒன்று சொல்லிக் குழப்பினார்கள்.

அது ஒன்னும் இல்ல அண்ணா. அம்மாவிற்கு நிலாவின் கல்யாணத்தை பார்க்கனுனு ரெம்ப ஆசை. டாக்டர் வேறா அது இது சொல்ல அவங்களுக்குப் பயம் கொஞ்சம் அதிகமாகுது. அதான் என் பேத்திக்குச் சீக்கிரம் கல்யாண சொஞ்சி வச்சி பார்த்துட்டு நான் கண்ண மூடுறே னு புலம்புறாங்கஎன்று நாகராஜனைப் பார்த்துக் கூறினார் சிவகாமி.

அவர்களின் நிலை நாகராஜனுக்கும் பானுமதிக்கும் நன்றாக புரிந்தது. சற்று யோசித்த நாகராஜன், “அப்போ ஜோதிடர் சொன்ன அந்த first dateல கல்யாணத்தை நடத்திடலாம் சம்பந்தி. என்ன சொல்றீங்கஎன்று cool ஆகச் சொன்னார்.

சங்கரும், சிவகாமியும் இதை எப்படிக் கேட்பது என்றுதான் தயங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதைப் புரிந்து கொண்டு நாகராஜன் ஈசியாக சொல்லிவிட்டதை கேட்டு அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.

அண்ண, இதை எப்படி சொல்றதுனு தான் தெரியாம நாங்க தடுமாறிக்கிட்டு இருந்தோம்என்றார் சிவகாமி உரிமையோடு.

அண்ணானு உரிமையோடு கூப்பிட்டுவிட்டு அப்புறம் எதுக்குமா தயக்கம்என்றார் நாகராஜன்.

இல்ல சம்பந்தி, இன்னும் 30 நாள் கூட முழுசா இல்ல. அதுக்குல்ல எப்படி னு தான் நாங்களே பயந்தோம். ஆனா நீங்க அத பத்தி யோசிக்காம டக்குனு கேட்டது. என்ன

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.