(Reading time: 14 - 27 minutes)
Senthamizh thenmozhiyaal
Senthamizh thenmozhiyaal

அனைவருக்கும் பங்கு கொடுக்க வேண்டும்” இளங்கோ அவன் சார்பில் கூறவும் தேன்மொழியின் விழிகளில் நீர் திரண்டது.

“என்ன பாப்பா இதுக்கு எல்லாம் கண் கலங்கிட்டு. நீ தான் எங்க எல்லோருக்கும் உயிர்சக்தி. இப்போ எங்களுக்கு மட்டுமில்லாம கடலில் வாழும் பல உயிர்களின் உயிர்சக்தியா இருக்கணும்னு நீ அதற்கு முயற்சி எடுக்கும் போது நாங்க அதற்கு என்ன வேண்டுமோ அத்தனையும் செய்து தருவோம்” என்று குடும்பத்தினர் முழு ஆதரவு கொடுக்கவும் தேன்மொழிக்கு மிகுந்த உற்சாகம் பிறந்தது.

கடலை தூய்மை செய்வது எப்படி, இது போல உலகில் மற்ற இடங்களில் எவ்வாறு செய்கிறன்றனர், அதற்கு என்ன மாதிரியான ஆராய்ச்சிகள் நடக்கின்றன என்று எல்லாம் முதலில் தெரிந்து கொண்டாள்.

கெவின் மற்றும் அவனது நண்பர்கள் பெருமளவு அவளுக்கு உதவிகள் செய்தனர்.

இந்த முயற்சிகள் ஒரு புறம் இருக்க கடலுக்குள் இருக்கும் நிலையை தானே சுயமாக கண்டு அறிய முற்பட்டாள்.

“செந்தமிழ் உன் பேர்ல தான் இந்த பவுண்டேஷன் ஆரம்பித்து இருக்கேன். வீட்ல எல்லோரும் முழு சப்போர்ட். சயின்டிஸ்ட், சுற்றுச் சூழல் பாதுகாவலர்கள்ன்னு நிறைய பேர் உதவி செய்ய முன் வந்திருக்காங்க. நாம அதை முழு அளவில் பயன்படுத்திக்கணும்” அந்திப் பொழுதில் அனைத்தையும் செந்தமிழிடம் கூறிக் கொண்டிருந்தாள்.

செஷல்ஸ் தீவுக் கூடத்தில் மனிதர்கள் வசிக்காத தீவுகள், பவழப் பாறைகள், மணல் குன்றுகள் போன்ற இடங்களில் தான் செந்தமிழை தேன்மொழியும் ஆதியும் சந்திப்பது வழக்கம்.

மற்ற மனிதர்களின் பார்வையை செந்தமிழ் தவிர்க்க விரும்புவதை அறிந்த தேன்மொழி இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருந்தாள்.

“உனக்கு மனுஷங்கள கண்டா பயமா இருக்கா செந்தமிழ். உன்னை இதுக்கு முன்னாடி யாராச்சும் கஷ்டப்படுத்தியிருக்காங்களா. உனக்கு எத்தனை வயசாகுது” செந்தமிழின் பதிலை எதிர்பாராத கேள்விகள் அவை.

அவளது கேள்விகள் அனைத்திற்கும் செந்தமிழின் பதில் ஒன்று தான். தனது நீண்ட கரங்களைக் கொண்டு தேன்மொழியை அணைத்துக் கொள்வது.

கடலுக்குள் செல்லும் போதெல்லாம் செந்தமிழ் தேன்மொழிக்குத் துணையாக வந்துவிடுவான். கடலுக்குள் பல அரிய அதிசயங்களிடம் தேன்மொழியைக் கூட்டிச் சென்றான்.

தேன்மொழியின் மரைன்  புகைப்படங்கள் மிகுந்த பிரபலமானது. மிகப் பெரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் அவளது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களின் ரைட்ஸ் பெற

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.