(Reading time: 14 - 27 minutes)
Senthamizh thenmozhiyaal
Senthamizh thenmozhiyaal

தேன்மொழிக்கு ஆதியும் செந்தமிழும் துணை இருக்கிறார்கள் என்ற தைரியம் கொண்டிருந்தார்.

அப்போது ஓர் நாள் கவின் என்று தேன்மொழி அழைக்கும் கெவின் தேன்மொழியைக் காண விரும்பினான்.

எப்போதும் போல நேர்காணல் செய்யத் தான் வருகிறான் என்று தான் தேன்மொழி நினைத்தாள்.

ஆனால் அவன் தனியாக வரவில்லை. உடன் வேறு சிலரும் இருந்தனர்.

புகழ் பெற்ற சேனல் ஒன்றிற்கு ஓர் நிகழ்ச்சி செய்து தருமாறு அவளிடம் கேட்டனர்.

கடல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த டாகுமன்ட்ரி படம் தான். ஆனால் லைவ் ஷோ போல இருந்தால் புதுமையாகவும் இருக்கும். அதிக அளவு ரீச் கிடைக்கும் என்றனர்.

தேன்மொழியின் அரிய புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் தான் அவளை அக்குழுவினர் அணுகக் காரணம் என்று கெவின் தெரிவித்தான்.

யாருமே இது வரை பார்த்திராத கடலின் பக்கம் என்றால் சேனலுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும். கூடவே தேன்மொழியின் செந்தமிழ் சேவ் தி ஸீ அமைப்பை பற்றி உலகத்திற்கு தெரிய வரும். அதனால் விழிப்புணர்வும் ஏற்படும் என்று அவர்கள் கூறவும் தேன்மொழி அதிலே ஈர்க்கப்பட்டாள்.

“உங்களோட படங்கள், விடியோக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கூடவே ஒரு பத்து மணி நேர லைவ் வீடியோ கிடைத்தால் மற்றதை நாங்க எடிட் செய்துக் கொள்வோம்” என டாகுமன்ட்ரி பட டைரெக்டர் கூறினார்.

“பத்து மணி நேர லைவ் வீடியோ என்றால்” தேன்மொழி சந்தேகம் கேட்டாள்.

“எங்க வீடியோகிராபர்ஸ் உங்களோட போட்டில் வருவாங்க. நீங்க டைவ் செய்யும் போது கூடவே ஒருவரை அனுப்புவோம். ஆடியோ மட்டும் தனியாக உங்க வாய்ஸில் டப்பிங் செய்து அட்டாச் செய்திடுவோம்” என்று விளக்கிச் சொன்னார்.

“எப்படியும் ஒரு வாரம் பத்து நாள் போல இந்தக் குழு இருக்க வேண்டியிருக்குமே” தேன்மொழி கேட்க ஆம் என்று கெவின் தெரிவித்தான்.

கடல் உலகத்தை காப்பாற்றுவோம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் நிகழ்ச்சி என்பதால் தேன்மொழி சம்மதம் சொன்னாள்.

ஆனால் ஒரு வாரம் பத்து நாள் போல கடலுக்குள் இந்தக் குழுவினரோடு செல்லும் போது செந்தமிழை தனியாக எப்படி சந்திப்பது என்று யோசனை புரிந்தவாறே அமர்ந்திருந்தாள்.

“அக்கா செந்தமிழ் பத்தி ஏன் நீ கவலை கொள்கிறாய். அவங்க போட் எல்லாம் கொண்டு வராங்க. குழு பூராவுமே வருது. நாம கடல்புறாவில் போவோம். நீ ஷூட் செய்து முடித்ததும் அவங்களை மாஹேக்கு அனுப்பிடுவோம். அப்புறம் செந்தமிழை நாம சந்திச்சிட்டு திரும்பலாம்” ஆதி சொல்லவும் தேன்மொழிக்கு நிம்மதி பிறந்தது.

ஆனால் அந்த நிம்மதிக்கு ஆயுள் மிகவும் குறைவு என்று காலம் அவளை பார்த்து பரிதாபப்பட்டது.

தொடரும்

Episode # 16

Episode # 18

Go to Senthamizh thenmozhiyaal story main page

{kunena_discuss:1218}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.