Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 16 - மது - 5.0 out of 5 based on 2 votes
Senthamizh thenmozhiyaal
Pin It

தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 16 - மது

பாரீஸ் ஆடை வடிவமைப்புப் போட்டியில் பரிசு பெற்றக் கையோடு மொத்தக் குடும்பமும் செஷல்ஸ் வந்து சேர்ந்திருந்தனர்.

“அம்மா, அக்கா உங்க ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்” என இருவரையும் கட்டிக் கொண்டு முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை தேன்மொழி தெரிவித்தாள்.

கூடவே சர்வதேச மரைன் போட்டோகிராபி போட்டிக்கு தான் அனுப்பவிருக்கும் படத்தை குடும்பத்தினர் அனைவருக்கும் காட்டினாள்.

நைலான் கயிற்றில் சிக்குண்டு தவித்துக் கொண்டிருந்த ஆக்டபஸ் அனைவரையும் உலுக்கி விட்டிருந்தது.

“ஐயோ பாப்பா, இது என்ன இப்படி...” வானதிக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை.

“இந்த ஆக்டபஸ தற்செயலாக இப்படி ஒரு நிலையில் நான் பார்க்க நேர்ந்தது அக்கா. கேமரா ஆன் செய்யப்பட்டு இருந்தது கூட எனக்கு அப்போது நினைவே இல்லை. கடவுள் அருளால் இந்த ஜீவன் பிழைத்துக் கொண்டது” என்று கூறியவள் மனதில் செந்தமிழ் அருளால் என்று கூறிக் கொண்டாள்.

“அப்போ கடலுக்குள் கொந்தளிப்பு ஏற்பட்டு நான் ஒரு தீவில் ஒதுங்கும் படி ஆகிருச்சு. அப்புறம் தாத்தா ஆதி ரெஸ்க்யூ டீம் அனுப்பி என்னை மீட்டுக் கொண்டு வந்தாங்க” என்று தானே குடும்பத்தினரிடம் பக்குவமாக எடுத்துச் சொன்னாள்.

“கிரேட் பாப்பா. உன்னை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு” இளங்கோ செல்லத்தங்கையை பெருமிதத்தோடு உச்சி முகரவும் மற்றவர்களும் இயல்பாக எடுத்துக் கொண்டுவிட்டனர்.

நடந்த நிகழ்வுகளின் தீவிரத்தை மிக அழகாக சாதரணம் போல எடுத்துச் சொல்லி சமாளித்த பேத்தியை தாத்தா உள்ளுக்குள் மெச்சிக் கொண்டாலும் இப்போது நினைத்தாலும் அவருக்குள் நடுக்கம் பிறந்தது.

“இந்த படங்களை தான் நான் போட்டிக்கு அனுப்பப் போகிறேன். போட்டியில் கலந்து கொள்ளும் புகைப்படங்களை எல்லாம் பிரபல பத்திரிக்கைகள்  மற்றும் சேனல்களில் போடுவாங்க. இந்தப் படம் உலகத்தில் எல்லோருக்கும் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” மிக தீர்க்கமாகக் கூறினாள்.

குடும்பத்தினர் அனைவரும் சென்னைக்குத் திரும்பிவிட தாத்தாவிடம் கடலுக்குள் செல்ல அனுமதி வேண்டி நின்றாள் தேன்மொழி.

“பாப்பா நடந்ததை பூசி மெழுகி அரைகுறையாக உன் அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டா நான் உன்னை கடலுக்குள் அனுமதிப்பேன்ன்னு நினைச்சுக்கிட்டியா” தாத்தா கேட்கவும் தேன்மொழி

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7 
 •  Next 
 •  End 

About the Author

Madhu Honey

Madhu Honey

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
 • NA
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 16 - மதுJebamalar 2019-08-28 12:48
Epadio Oru valiya senthamila meet panitanga... Ini antha film aala ethum prob vanthida koodathi senthamizhlku... Super
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 16 - மதுMadhu_honey 2019-08-29 01:45
Thanks so much Jebamalar...antha film enna prachanai kondu varumnu seekirame theriyum
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 16 - மதுAdharvJo 2019-08-27 19:45
wow soulful Madhu ji :clap: :clap: Its a dedication to every species on earth :hatsoff: As always it gives a divine feel!!
Senthamizh-ku ena anadhunu therinjika waiting. thank you!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 16 - மதுMadhu_honey 2019-08-29 01:44
Thanks so much Adharv... love and compassion towards all the living beings is the backbone of the story.. and neenga athai recognise seithathu rombave santhoshama irukku
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 16 - மதுmadhumathi9 2019-08-27 12:06
wow senthamil thirumba vanthathu mikka magizhchi. :clap: (y) arumai :clap: :thnkx: 4 this epi.eagarly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 16 - மதுMadhu_honey 2019-08-29 01:43
Thanks so much Madhumathi...
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top