(Reading time: 12 - 23 minutes)
Senthamizh thenmozhiyaal
Senthamizh thenmozhiyaal

இவ்வாறான குப்பைகள் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களாக கடலில் கண்ணுக்குத் தெரியாத வடிவத்தில் கலந்துள்ளன. அவற்றை கடல் வாழ் உயிரனங்கள் உணவோடு சேர்த்து உண்ணும் போது அவைகளின் அழிவிற்கு காரணமாகின்றன இந்த பிளாஸ்டிக்.

அது மட்டுமல்லாமல் திமிங்கிலம், சுறா போன்ற பெரிய வகை உயிரனங்கள் பிளாஸ்டிக் பொருட்களை தெரியாமல் விழுங்கி விடுவதால் அந்த உயிர்கள் பெருமளவு இறந்து போகின்றன.

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் கடல் வாழ் பிராணிகள் ஆண்டுதோறும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளால் மாண்டு போகின்றன.

ஹவாய் கலிபோர்னியா இடையில் இருக்கும் பசிபிக் மாகசமுத்திரம் தான் அதிக மாசுபட்டு காணப்படுகிறது. அதை சுத்திகரிக்கும் நடவடிக்கைளை பல நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

அதற்கு அடுத்தபடி இந்து மகாசமுத்திரத்தில் தான் அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுகின்றன.

செந்தமிழ் சேவ் தி ஸீ ப்ராஜக்ட் இந்து மகா சமுத்திரத்தை சுத்தப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளும்.

ஆர்வமுள்ளவர்கள் இதில் இணைந்து கொள்ளலாம் என தேன்மொழி உலக தொலைக்காட்சிக்கு கொடுத்த நேர்காணல் முதலில் அவ்வளவு கவனிக்கப்படவில்லை என்ற போதிலும் தேன்மொழியின் குடும்பத்தினரின் முயற்சியால் அவளது நல்ல எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக செயல் வடிவம் பெற்று வளர்ந்தது.

உலகத்தின் தொண்ணூறு விழுக்காடு மக்கள் கடலுக்கு ஏற்பட்டுள்ள ஆச்சுறுத்துதல் அதற்கு உலகளவில் செய்யப்பட்டு வரும் முயற்சிகள் இவற்றைப் பற்றிய தகவல்களை கூட அறிய மாட்டார்கள்.

மிக பெரிய பின்புலம் இருந்த போதும் ஆர்ப்பாட்டம் இன்றி தனது முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தாள் தேன்மொழி.

செந்தமிழின் உதவியோடு மேற்கு இந்து மகாசமுத்திரத்தை முழுக்க சுற்றி வந்தார்கள் தேன்மொழியும் ஆதியும்.

தொடர்ந்து மூன்று வருடங்கள் சர்வதேச புகைப்பட போட்டியில் தேன்மொழியே வெற்றிபெற நான்காவது வருடம் தான் பங்கேற்கவில்லை என்று அறிவித்தாள்.

அவளது முயற்சிகளை அங்கீகரித்த பல நிறுவனங்கள் அவளோடு இணைந்து செயல்பட்டன.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.