(Reading time: 14 - 27 minutes)
Senthamizh thenmozhiyaal
Senthamizh thenmozhiyaal

முந்தியடித்தனர்.

அவளது புகைப்படங்களில் பல கடல் ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்தையும் தூண்டும் வகையாக அமைந்தன.

ஹவாய் மற்றும் காலீபோர்னியாவிற்கு இடையில் பெரிய கடல் குப்பை மேடு இருப்பதைப் போல இந்து மகா சமுத்திரத்தில் அந்த அளவு இல்லை என்றாலும் ஓர் குப்பை மேட்டிற்குத் தேன்மொழியை அழைத்துச் சென்றான் செந்தமிழ்.

கடலின் நீரோட்டத்தின் காரணமாக கடலுக்குள் வந்து சேரும் மக்காத குப்பைகள் எல்லாம் இப்படி ஆங்காங்கு சில இடங்களில் குவிந்து விடுவது வழக்கம்.

உலகத்தில் அதிக அளவு பிளாஸ்டிக்கை சுமந்து கொண்டு கடலில் கலக்கும் பத்து நதிகளில் சிந்து நதியும், கங்கை நதியும் அடக்கம்.

சிந்து நதியின் பிளாஸ்டிக் குப்பைகள் ஆரேபிய கடலிலும் கங்கை நதியுன் குப்பைகள் வங்காள விரிகுடாவிலும் கலந்த போதிலும் கடலின் நீரோட்டம் காரணமாக இந்து மாகசமுத்தில் மிகப் பெரிய குப்பை மேடுகளாக குவிந்து விடுகின்றன.

ஆராய்ச்சியாளர்கள் இது போன்ற குப்பை மேடுகளை சாட்டிலைட் உதவியோடு கண்டுபிடித்தாலும் மைக்ரோ பிளாஸ்டிக் குப்பைகள் கடலின் அடிஆழத்தில் சாட்டிலைட்டின் திருஷ்டிக்கு அகப்படாமல் ஒளிந்து கொண்டு இருக்கின்றன.

செந்தமிழின் வழிகாட்டுதலால் அப்படி இடங்களை தேன்மொழி கண்டுபிடித்து அக்குப்பைகளை அகற்றி சுத்திகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டாள்.

ஐந்து வருடங்களில் அவளது பவுண்டேஷனுக்கு நிறைய உதவிகள் கிடைக்கப்பெற்றன. செஷல்ஸ், மடகாஸ்கர், மொரிஷியஸ் பகுதிகளில் டைவர்ஸ் பலர் இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

தன்னைப் போல கடலை தூய்மை செய்யும் முனைப்புடன் சிறிய அளவில் செயல்பட்டு வரும் தன்னார்வளர்களை ஒருங்கிணைந்தாள்.

பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உதவிகள் புரிந்து செயல்பட்டு வந்தனர்.

தேன்மொழி இப்பணியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டுவிட்டதால் அவள் சென்னைக்கு வருவது அரிதாகிப் போனது.

அவளைக் காண குடும்பத்தினர் தான் மாறி மாறி செஷல்ஸ் வந்து சென்றனர்.

ஆன்லைன் சாட், போன் மூலமே அவள் வீட்டினரோடு தொடர்பில் இருந்தாள்.

தேன்மொழியின் பதினெட்டாவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட குடும்பத்தினர் முடிவு செய்து எல்லோரும் செஷல்ஸ் வந்திருந்தனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.