(Reading time: 14 - 27 minutes)
Senthamizh thenmozhiyaal
Senthamizh thenmozhiyaal

உத்தரவிட்டாள்.

செந்தமிழ் அவளை நோக்கி கரை மணலில் வந்த காட்சியை தாத்தா கண்டு பிரமித்துப் போனார்.

“எனக்கு பீவர் செந்தமிழ்” என்று பேத்தி ஆமை போன்ற அந்த பிராணியிடம் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்தவர் அவர்களின் ஆழ்ந்த பந்தத்தை அறிந்து கொண்டார்.

செல்லப் பிராணிகளைப் போல செந்தமிழ் தேன்மொழிக்கு என்று அவர் அறிந்து கொண்டார்.

அதனாலேயே தேன்மொழி சென்னை செல்வதை தவிர்த்த போது தாத்தா அதற்கு துணை நின்றார்.

அப்படியும் தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகளில் தேன்மொழி சென்னை செல்ல நேர்ந்த போது செந்தமிழ் தேன்மொழியைத் தேடிக் கொண்டு ரிசார்ட் வந்துவிட்டால் பார்த்துக் கொள்ளுமாறு ஆதியை பணித்து விட்டே சென்றனர்.

அவ்வாறே செந்தமிழ் தேன்மொழியை தேடிக் கொண்டும் வந்ததை பின்பு ஆதி மூலம் அறிந்து கொண்டதும் அந்த ஜீவன் தேன்மொழி மீது வைத்திருந்த அளவில்லா பாசம் தாத்தாவையும் கட்டிப் போட்டது.

செந்தமிழ் ஆதியிடமும் தாத்தாவிடமும் பிரியமாக இருந்தான்.

செந்தமிழின் அன்போடு அவனது அறிவும் தாத்தாவை வியப்பில் ஆழ்த்தியது.

தேன்மொழியின் பணிக்கு அவன் உற்றத் துணைவனாக திகழ்ந்தான்.

“இன்னிக்கு எனக்கு பர்த்டே. போன வருஷம் கூட தான் வந்துச்சுன்னு நினைக்கிறியா. இது பதினெட்டாம் பர்த்டே. அது ஸ்பெஷல். நான் வோட்டு போடலாம். எங்க ஊரில் வண்டி ஓட்ட லைசன்ஸ் வாங்கலாம். என்னோட முடிவுகளை சட்டப்பூர்வமா சுயமா எடுக்கலாம். முக்கியமா தாத்தாவை கஷ்டப்படுத்தாம அவரை ரெஸ்ட் எடுக்க ஊருக்கு அனுப்பிடலாம்” செந்தமிழிடம் வாழ்த்துக்களைப் பெற வந்தவள் அவனிடம் கூறிக்கொண்டிருந்தாள்.

எந்த நேரத்தில் தேன்மொழி அவ்வாறு கூறினாளோ தாத்தா அடுத்த சில மாதங்களில் வழுக்கி விழ அவரின்  இடுப்பெலும்பில் முறிவு ஏற்பட்டது.

மாஹேயில் அவசர சிகிச்சை செய்த போதிலும் அவரை மேற்கொண்டு சிகிச்சைக்கு சென்னை கூட்டிச் செல்ல ஏற்பாடு செய்தார் முத்துக்குமரன்.

தேன்மொழி மற்றும் ஆதி மாஹேயில் தங்கி விட்டிருந்தனர்.

தான் தனியாக சமாளித்துக் கொள்வதாக தேன்மொழி கூறவும் தாத்தாவும் அதற்கு சம்மதம் தெரிவித்து சென்னையிலே ஓய்வு எடுக்கலானார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.