4 மாதத்தில் இருந்து, 1 மாதமாக திருமண தேதி மாற்ற பட்டதை கேட்டு நிலா அதிர்ந்து போனாள்.
“என்னபா சொல்றீங்க, 28 நாளா, எப்படி, எல்லாம்” என்று அவள் வாயில் இருந்து வார்த்தை வரத் தடுமாறியது.
“நாங்க எல்லா விஷயத்தையும் பார்த்துக்கிறோம் நீ அத பத்தி கவலைப் படாத. எங்களுக்கு இருந்த பயம் எல்லாம் ரகு வீட்டில என்ன சொல்லுவாங்கனுதான், ஆனா அவங்க” என்று சிவகாமி சொல்லி முடிக்கும் முன்பே “என்ன மா சொன்னாங்க” என்று பதற்றமாக கேட்டாள்.
“அவங்களுக்கு நாளைக்கே நீ அவங்க வீட்டுக்குப் போனாள் கூட சந்தோஷம் டி. நங்க பயந்து பயந்து பேச நினைத்ததை ரொம்ப ஈஸியா அவங்க சொல்லிட்டாங்க” என்றார் சிவகாமி.
அந்த கதவும் அடைத்தது போல் இருந்தது நிலாவிற்கு. அவளுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, இதற்கு ரகு என்ன சொன்னான் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் தான். அதையும் தயக்கத்தோடு கேட்டுவிட்டாள் நிலா “ரகு என்ன”
“இல்லமா மாப்பிள்ளை shooting விஷயமா வெளிநாடு போயிருக்காராம். சம்பந்தி அவ்வளவு உறுதியா சொல்லும் போதே தெரியுது, மாப்பிள்ளைக்கு இதில் ஏதும் மாற்றுக் கருத்து இருக்காது னு. இருந்தாளும் அவர ஒரு வார்த்தை கேட்டு சொல்லுங்க நு சொல்லிட்டு வந்திருக்கோம்” என்று பதில் அளித்தார் சங்கர்.
நிலாவிற்குத் தூரத்தில் ஒரு நம்பிக்கை ஒளி தெரிந்தது. ரகுக்கிட்ட எப்படியாவது பேசி அவனை வைத்து இந்த கல்யாணத்தை நிறுத்திவிட வேண்டும் என்று தனக்கு நினைத்துக் கொண்டு, “சரி மா நான் போய் படுக்கிறேன். நான் evening officeல சாப்பிட்டுவிட்டே. அதனால் இப்போ பசிக்கல” என்று கூறிவிட்டு அவள் அறைக்குச் சென்றாள்.
உள்ளே சென்றதும், முதல் வேளையாக தன் கை பையில் இருந்து ரகுவின் கார்டை எடுத்து அவன் mobileக்கு dail செய்தாள் நிலா. அது நீண்ட நேரம் ஒளித்து கட் ஆனது. ரகு mobileஐ எடுக்கவில்லை. நிலாவும் விடுவதாக இல்ல. இன்னும் 2 3 முறை முயற்சி செய்தாள் ஆனால் எதிர் முனையில் எடுக்க வில்லை.
“ஒரு வேளை அவன் எங்கயோ போயிருக்கானு சொன்னாங்களே அதனால எடுக்கலயா. சரி ஒரு message மட்டும் அனுப்பி விடுவோம்” என்று முடிவு செய்து, தான் நிலா என்றும் “அவசரமாகப் பேச வேண்டும்” என்றும் type செய்து message அனுப்பிவிட்டு தன் படுக்கையில் சாய்ந்தாள் நிலா.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.