(Reading time: 11 - 22 minutes)
Enakena yerkanave piranthavan ivano
Enakena yerkanave piranthavan ivano

நாட்கள் செல்ல செல்ல அவளது நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. ரகுவும் அதற்குப் பிறகு நிலாவிற்குக் கால் செய்ய வில்லை. அவன் இன்னும் சென்னைக்கும் வரவில்லை.

திருமண வேளைகளும் வேகமாக நடந்து கொண்டிருந்தது. கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டுப் தன் மனநிலையைத் திருமணத்திற்காகத் தயார் செய்து கொள்ள ஆரம்பித்தாள். திருமணத்திற்கு நகைகள் புடவைகள் என வாங்கும் நிகழ்ச்சிகளில் மறுப்பு சொல்லாமல் கலந்து கொண்டாள்.

அவளின் அந்த மாற்றத்தைப் பார்த்து சங்கருக்கும் சிவகாமிக்கும் மகிழ்ச்சி.

திருமண நாளிற்கு முதல் வாரம்தான் ரகு மீண்டும் சென்னை வந்தான். வந்து தன் mobileஐ பார்த்தவனுக்கு நிறைய missed calls, messages இருந்தது. அதில் சில நிலாவிடம் இருந்து வந்திருந்தது.

நிலாவின் message அனைத்திலும், “need to talk to you a important matter. Urgent” என்றுதான் இருத்தது.

சிறுது நேரத்தில் நிலாவிற்குக் கால் செய்தான் ரகு. Call attend ஆனவுடன், “ஹலோ நான் ரகு பேசுறேன், நிலா?” என்று நிறுத்தினான் ரகு.

மாப்பிள்ள நான் அத்த பேசுறேன். நிலா இங்கதான் beauty parlor la facial போட்டுட்டு ஒக்காந்துட்டு இருக்கா. நீங்க சென்னை வந்துட்டிங்களா, travel எல்லாம் நல்ல படியா இருந்துச்சாஎன்று ரகுவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

சிவகாமி யாரிடம் பேசுகிறார் என்று நிலாவோடு சேர்த்து அங்கு இருந்த அவள் தோழிகளுக்கும் தெளிவாகத் தெரிந்தது.

ஏண்டி உன் ஆளுக்கிட்ட இந்த time beauty parlourல இருப்ப னு சொல்லவே இல்லையா. பாரு தெரியாம கால் பண்ணி உங்க அம்மா கிட்ட மாட்டிக்கிட்டாருஎன்றாள் ஒருத்தி. அதைக் கேட்டு அனைவரும் கிண்டலாக சிரித்தனர்,

நிலாவிற்கோ அவள் சொல்வதைக் கேட்டுப் பற்றிக் கொண்டு வந்தது “இவ வேற என் நிலைமை தெரியாமல். நான் இந்த நேரத்தில் இந்த இடத்தில் இருப்பேனு சொல்ற அளவுக்கு அவன் கிட்ட பேசிருந்த நா இங்க facial போட்டுகிற அவசியமே வந்திருக்காதுஎன்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் பேசி நலம் எல்லாம் விசாரித்து விட்டு போனை நிலாவிடம் கொடுத்தார் சிவகாமி.

Mobileஐ கையில் வாங்கிஹலோஎன்றாள் நிலா.

ஹலோ நிலா, நான் ரகு பேசுறேன்என்றான் ரகு.

ம்ம்ம் தெரியுதுஎன்றாள் நிலா. அவளது தோழி வானர படைகள் முழுவதும் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தது.

நான் இப்போதான் வீட்டுக்கு வந்தேன். Mobileல உங்க message பார்த்தேன். அதுதான் கால் பண்ணேன். ஏதோ முக்கியமான விஷயம் பேசனும் நு message பண்ணிருந்திங்கஎன்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே,

தொடரும்

Episode # 12

Episode # 14

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.