(Reading time: 11 - 22 minutes)
Enakena yerkanave piranthavan ivano
Enakena yerkanave piranthavan ivano

நிலாவிற்கு அதைக் கேட்கும் போது அவளது மொத்த நம்பிக்கையும் நொறுங்கிப் போனது. அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள்.

அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்து “நிலா என்ன மா, ரகு கிட்ட பேசனுமாஎன்றார் நாகராஜன்.

நிலாவிற்கு ஆம் என்று கூறி காரணத்தையும் சொல்ல முடியாது, இல்லை என்று பொய்யும் சொல்ல முடியவில்லை. தட்டுத் தடுமாறிஅதெல்லாம் இல்ல uncle, நீங்க எப்படி இருக்கிங்க, aunty எப்படி இருக்காங்கஎன்று பேச்சை மாற்றினாள்.

அதற்குப் பதில் அளித்து நாகராஜனும் நிலாவும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர்.

நிலா ஏதோ சொல்ல தயங்குகிறாள் என்று நாகராஜனுக்குப் புரிந்தது. பேசி விட்டு வைக்கும் போது நிலா ரகு கால் செய்தால் நான் உனக்குக் கால் செய்ய சொல்றேன் மாஎன்றார்.

அவள் கேட்காமலே அவர் அவள் எண்ணத்தைப் புரிந்து கொண்டது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. “thanks uncle” என்று மட்டும் கூறி போன்னை வைத்தாள் நிலா.

ரகுவிடம் பேசமுடியாமல் போனதில் நிலாவிற்கு வருத்தம் இருந்தாலும், தன் தந்தையை போல், தான் கூறாமலே தன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட நாகராஜனின் மேல் நல்ல மதிப்பும் வந்தது.

நாகராஜன் நிலா போன் செய்து பற்றிக் கூறி, ரகு போன் செய்தால் அவனிடம் சொல்லிவிடுமாறு பானுமதியிடம் கூறினார்.

அன்று இரவு ரகுவும் கால் செய்து தான்.

டேய் ரகு எப்படிடா இருக்கஎன்றார் பானுமதி.

நான் நல்ல இருக்கேன் மா. நீங்க அப்பா எப்படி இருக்கீங்கஎன்று அவனும் விசாரித்தான்.

நாங்க எல்லாம் நல்ல இருக்கோம் டா. நேத்தே நீ கால் பண்ணுவனு உன்னோட போன்க்காக தான் காத்துக்கிட்டு இருந்தோம்.” என்றார் பானுமதி.

இல்லமா இப்போ நாங்க இருக்கிறது forest area மா, இங்க போன் வசதி இல்ல. வெளியே வரும் போதுதான் கால் பண்ண முடியும் அதான் நேத்து கால் பண்ணலஎன்றான் ரகு.

“forest நா ஜாக்கிரதையா இருப்பா. வேற ஏதும் பிரச்சனை இல்லலஎன்று தாய்க்கே உறிய அக்கரையோடு கேட்டார் பானுமதி.

இல்லமா அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. நான் நல்ல இருக்கேன்என்றான் ரகு.

நான் ஒரு முட்டாள் உன் கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும். அத விட்டுட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கேன்என்று கூறிவிட்டு, சங்கரும், சிவகாமி தங்கள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.