(Reading time: 11 - 22 minutes)
Enakena yerkanave piranthavan ivano
Enakena yerkanave piranthavan ivano

மறுநாள் காலை, தன் தோழியின் திருமணம் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தது. நிலா தன் mobileயை கையிலே வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள். இன்னொரு முறை அவன் கால் செய்தால் மிஸ் செய்து விடக் கூடாது என்று, ஆனால் அவள் எதிர் பார்ப்பு பொய்யாகிப் போனது.

அடுத்த ஒரு வாரம் வேகமாக ஓடியது. இரு வீட்டார் பக்கத்திலும் கல்யாண வேளைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்தது. நாகராஜனும் சங்கரும் சேர்ந்து கல்யாண மண்டபம், சமையல் என அனைத்து வேளைகளையும் செய்து கொண்டிருந்தனர்.

நிலாவிற்கு பதற்றம் அதிகரித்துக் கொண்டே போனது. ரகுவையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கல்யாணத்தை நிறுத்தவும் வேறு வழி தெரியவில்லை அவளுக்கு.

ரகுவோ, அன்று ஒருனாள் இன்றோரு நாள் என தன் பெற்றோருக்கு போன் செய்து சற்று நேரம் பேசுவான். கல்யாண வேலை பற்றிப் பேசினால் சரியா எதுவும் சொல்லாமல் பேச்சை மாற்றி விடுவான்.

அதிகம் பானுமதியிடம் மட்டும் பேசுவதால், அவர் தன் மகனை விட்டு கொடுக்காமல் தன் கணவனிடம் எதாவது சொல்லி சமாளித்து விடுவார்.

அடுத்த வாரம், ஒரு நாள் நிலா வேளை பார்த்துக் கொண்டிருக்கும் போது அவள் mobileக்கு unknown நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. பார்ப்பதற்கு வெளி நாட்டு நம்பர் போல் இருக்க ரகுவாக இருக்கும் என்ற ஆர்வத்தில் கால் அட்டன் செய்தாள். அட்டன் செய்து இவள் ஏதும் பேசவில்லை. எதிர் முனையில் ஒரே இறைச்சல் சத்தமாக இருந்தது.

அந்த சத்தத்துடன் சேர்த்து ஒரு ஆணின் குரல். “ஹலோ நான் ரகு பேசுறேன். Is it நிலாஎன்று.

அவனின் பேச்சு அவ்வளவு தெளிவாக இவளுக்கு கேட்கவில்லை என்றாலும், அது ரகுதான் என்று உறுதி செய்து கொண்டாள்.

ஆமாம், நான் நிலாதான் பேசுறேன். ரகு நான் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்என்று நிலா கூற, எதிர் முனையில் இருந்துஹலோ நான் பேசுவது கேட்குதா, நிலா நான் உங்ககிட்ட urgentஆ பேசனும், நிலா கேட்குதாஎன்று ரகு கூற, கால் கட் ஆனது.

நிலா ஹலோ, ஹலோ என்று 2 முறை கூறிவிட்டு mobile screenஐ பார்த்தாள் அது கட் ஆகிருந்தது. அவளுக்கு அது தன் தலை எழுத்தா அல்லது துருதர்ஷ்ட்டமா என்று என்ன சொல்வது என்று தெரியவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.