Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 04 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Ila manasonnu rekka katti parakkuthe
Pin It

தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 04 - சசிரேகா

ண்டபத்தை விட்டு அனைவரும் வீடு திரும்பினார்கள். இதில் பெரிய மனிதனின் களையோடு சட்டை கசங்காமல் வீட்டை விட்டு முறை செய்ய சென்ற இளங்கோவனோ வீடு திரும்பும் போது சட்டையெல்லாம் கசங்கி முகம் வாடி கன்னத்தில் கதிரவனின் விரல்கள் பதிந்திருக்க தலை முடி கலைந்து கோபமாக பாட்டியுடன் வந்து சேர்ந்தான்.

அவர்களின் வரவிற்காகவே காத்திருந்தார்கள் வீட்டில் இருந்தவர்கள், அதில் தாத்தாவோ இளங்கோவின் கோலத்தைக் கண்டு உடனே புரிந்துக் கொண்டார்

என்னாச்சி யார் இப்படி செஞ்சா உன்னைஎன கேட்க இளங்கோவோ கண்கள் கலங்க

தாத்தாஎன அழுதுக் கொண்டே அவரை அணைத்துக் கொண்டான்

என்னடா யார்டா இந்த வேலையை செஞ்சது, எவனவன் உன் மேல கையை வைச்சதுஎன கத்த

கதிரவன் அண்ணன்

கதிரவனா, நினைச்சேன் அவன்தான்னு, திமிரு புடிச்சவன், என்ன தைரியம் அவனுக்கு, இந்த செங்கோடன் பேரனையே அடிக்கற அளவுக்கு பெரியாளாயிட்டானா, நீ ஏன்டா சும்மா வந்த அவனை அடிச்சி விரட்ட வேண்டியதுதானே

வேற எவனாவது அடிச்சிருந்தா இந்நேரம் நீங்க சொன்னமாதிரி செஞ்சிருப்பேன் தாத்தா, அடிச்சது யாரு என் கூடப்பிறந்த அண்ணனா நினைச்ச கதிர் அண்ணாவை, அவர் மேல நான் பாசம் வைச்சிருக்கேன், மதிப்பும், மரியாதையும் வைச்சிருக்கேன், அவரை அடிக்க எனக்கு மனசு வரலை, அதான் முறை செய்றத அவருக்கு விட்டுக் கொடுத்துட்டு வந்துட்டேன்என சொல்ல தாத்தாவோ அமைதியாக நின்றிருந்த பாட்டியை கோபமாக முறைத்தபடியே

இதுக்குதான் நான் அப்பவே சொன்னேன், போக வேணாம்னு கேட்டியா, இப்ப பாரு என்னாச்சின்னு, இது தேவையா நம்ம பேரனை அந்த கதிரவன் அடிச்சிருக்கான், சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தியா நீஎன கத்த அதற்கு பாட்டியோ

அடிச்சது அவனா இருந்தாலும், அவனை திருப்பி அடிக்காமயே அவன் மானத்தை வாங்கிட்டு வந்திருக்கான் இளங்கோஎன கெத்தாக சொல்ல

என்ன சொல்ற நீஎன கேட்க பாட்டியும் அங்கு நடந்தவற்றை விளக்கமாக சொல்லி முடிக்க தாத்தாவின் மனம் மாறியது, அவர் இளங்கோவை கர்வமாகப் பார்த்தார்

நீதான்டா என் பேரன், அவனுக்கு சரியான பாடத்தை கத்துக்கொடுத்த, பணக்காரன்ங்கற திமிர்ல ஆடிட்டு இருந்தான்ல, இப்ப பாரு அவன் பணமா அவனை காப்பாத்திச்சி, மானம் போச்சா அவனுக்குஎன சொல்ல பாட்டியோ

கதிரவனுக்கும் சரி அவன்கூட வந்தவங்களுக்கும் சரி, சரியான நெத்தியடி கொடுத்திருக்கான்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 04 - சசிரேகாmadhumathi9 2019-09-20 06:09
:clap: nice epi sasi.but kathiravanukku,ilango,gayathriyaal adhirchi mel adhirchiyaaga nafakkiratju.irsndu peraiyum eppadi sari panna poraangannu parppom. :thnkx: 4 this epi.eagarly waiting 4 next epi. :GL: :thnkx: for 16 pages. :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 04 - சசிரேகாதீபக் 2019-09-19 18:05
sis today's episode really super :clap: . kathir realized is mistake and when will Elangovan realize it? Friendship betwwen kayal and gayathri now become week after this function. Eagerly waiting to know what is going to happen next? :thnkx: for this episode. :GL: for the next one.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 04 - சசிரேகாJebamalar... 2019-09-19 17:54
Aaha... Ini ena nadakum??.. Elangi hero nu neenga sonalaum kathir than super... Kayathri kayal ninaikirathu nadakuma... Waiting for next epi sisy... :thnkx: for this story... :clap:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top