(Reading time: 9 - 17 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

மோட்டோ தெரிலனாலும் எல்லாரையும் எச்ரிக்கையா இருக்க சொல்றது நல்லது.”

ம்ம் கரெக்ட் தான்..சொல்லிடுங்க பட் விஷயம் இந்த வீட்டைத் தாண்டி வெளியே போக வேணாம்.எப்பவுமே நம்மை சுத்தி இருக்குறவங்கள தான் முதல்ல சந்தேகப்படனும்..”

ம்ம்..வில் சீ யூ லேட்டர்..”

அண்ட் இன்னைக்கு வெளி போறேன்..கூட உங்க தம்பி தங்கையும் வராங்க..”

அவங்களா!!சரி ஓகே டேக் குட் கேர் ஹோப்புல்லி உனக்கு தலைவலி வராம இருக்கணும்..”,என்றவன் அங்கிருந்து சென்றுவிட அதன் பின் தான் அவன் கூறியதன் அர்த்தம் புரிந்து இடவலமாய் தலையசைத்தவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

காலை உணவு வேளையில் அவன் விஷயத்தைக் கூற ஆளாளுக்கு ஒன்றொன்றாய் கூற ஆம்பித்து விட மகிழன் பொறுமையிழந்து கொண்டிருந்தான்.

வர வர இந்த வீட்ல இருக்வே பயமா இருக்கு..எப்போ என்ன நடக்குமோ தெரில”,என ரமா தேவி ஆரம்பிக்க

ரமா வாயை மூடிட்டு இரு.இப்படி அதையும் இதையும் சொல்லி நம்மளை இங்க இருந்து வெளிய அனுப்ப தான் திட்டம் நடக்குது.அது புரியாம நீயும் கத்திட்டு இருக்க..இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு..”

கொஞ்சம் வாயை மூடுங்க எல்லாரும்..நடந்தது இது தான்.சொல்ல வேண்டியது என் கடமை நான் சொல்லிட்டேன்.நம்புறதும் நம்பாததும் அவங்க அவங்க இஷ்டம்.இங்க இருக்கணும்னா இருங்க இல்லையா கிளம்புங்க யாரையும் யாரும் எதுக்காகவும் கட்டாயப் படுத்த போறதில்லை.

அட்ஒன் திங் இங்க நடக்குற எந்த விஷயமும் நம்மை தாண்டி வெளியே போகக் கூடாது.உங்க அத்தனை பேரையும் விட இந்த வர்மா சாம்ராஜ்யம் எனக்கு ரொம்பவே முக்கியம்.சாம்ஜே?”

அவன் அதட்டிய விதத்தில் அத்தனை பேரும் வாயை மூடிக் கொள்ள ஷியாமா மட்டும் எந்த உணர்வுமின்றி தன் உணவை உண்டு கொண்டிருந்தாள்.அதைக் கண்டு இன்னும் கடுப்பானவராய் சாந்தி தேவி சத்தமாகவே முணுமுணுத்தார்.

இங்க என்ன வீட்டு ஆளுங்க மட்டுமா இருக்காங்க?”

ஷியாமா தான் நடந்த அத்தனைக்கும் சாட்சி அவளை வச்சிட்டு பேசுறதுல எந்த தப்பும் இல்ல.அண்ட் எனக்கு நல்லாவே தெரியும் யாரை வச்சுட்டு என்ன விஷயம் பேசனும் பேச வேண்டாம்னு..”,என்றவன் வேகமாய் எழுந்து அறைக்குச் சென்று விட்டான்.

அவன் சென்றதை உறுதிப்டுத்தியவராய் சர்வேஷ் மனைவியிடம்,”அவனைப் பத்தி தெரிஞ்சும் ஏன் சரிக்கு சரி பேசிட்டு இருக்க..”

சின்ன பையன் அவன்..அவன்கிட்ட நான் அடங்கிப் போனுமா?இது என் அப்பா வீடு..அவனை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.