Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 05 - சித்ரா. வெ - 5.0 out of 5 based on 2 votes
Verena nee iruppin.. Verethum vendame
Pin It

தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 05 - சித்ரா. வெ 

கார்த்திகேயனின் கோபத்தில் நித்யா சில நொடிகள் அதிர்ச்சியில் நின்றவள் தான், பிறகு தான் அதிகப்படியான வாசனை கொண்ட வாசனை திரவியம் அவனுக்கு ஒத்துக் கொள்ளாது என்பதை நேற்று சொன்னானே, அதற்காகவே அந்த குறுகிய சோஃபாவில் உறங்கினானே என்பதை கவனத்தில் கொண்டு வந்தவள், அவனிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று முதலில் அவன் அறைக்கு செல்வதற்காக சென்றவள், பின் அவள் மேனியில் வீசும் இந்த வாசனையோடு அவன் அருகில் செல்வது சரியாக இருக்காது என்பதை யோசித்து,

இரவில் அணியும் நைட்டி ஒன்றை எடுத்துக் கொண்டவள், குளியலறைக்குச் சென்று சாதாரணமாக ஒரு குளியலை  போட்டு உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தவள், நேராக சென்று அவனது அலுவலக அறை கதவைத் தட்டினாள்.

சில நிமிடங்கள் அவள் தட்டட்டும் என்று காத்திருந்தவன் போல் அமைதியாக இருந்தவன், பின் வந்து கதவை திறக்கவும், நைட்டியில் நின்றிருப்பவளை பார்த்து கண்களில் வியப்பைக் காட்டினான்.

"சாரி மாமா.. நீங்க சொன்னது எனக்கு ஞாபகத்துக்கே வரல.. எனக்கு எப்போதும் இந்த சென்ட் அடிக்கும் பழக்கமெல்லாம் கிடையாது.. நம்ம கல்யாணத்துக்கு என்னோட ப்ரண்ட்ஸ் தான் இந்த சென்ட் கிஃப்ட் செஞ்சாங்க..

நேத்து உங்க சொந்தக்காரங்கல்லாம் எனக்கு அலங்காரம் செஞ்சாங்கல்ல.. அப்போ சென்ட் அடிச்சு விட்டாங்க.. அதான் இன்னைக்கு நீங்க ரெடியா இருன்னு சொன்னதும், சென்ட் இருக்கவே அடிச்சுக்கலாம்னு நினைச்சேன்.. கண்டிப்பா அந்த நேரம் உங்களுக்கு இந்த வாசனையெல்லாம் பிடிக்காதுன்னு நீங்க சொன்னது எனக்கு ஞாபகத்துக்கே வரல.. சாரி மாமா.." என்று அவள் பேசி முடிப்பதற்குள், கண்களில் கண்ணீர் வரவில்லையென்றாலும் அழுதுக் கொண்டே பேசுவது போல் அவள் குரல் உணர்ச்சிவசப்பட்டிருந்தது.

அதில் நெகிழ்ந்தவனாக "ஹே கூல் நித்தி.." என்று அவள் கைகளை பிடித்துக் கொண்டவன், "சாரி நானும் கொஞ்சம் கோபப்பட்ருக்க கூடாது.. ஆனா எவ்வளவு சந்தோஷத்தோடு அவசர அவசரமா வேலையை முடிச்சிட்டு ஓடி வரேன் தெரியுமா? சாப்பாடு கூட வேகமா சாப்பிட்டு உன்கிட்ட வந்தா அப்படி ஒரு வாசனை.. சரி அட்ஜஸ்ட் செஞ்சுக்கலாம்னாலும் முடியாது.. இப்போ தான் சாப்பிட்டு வந்ததால வாமிட் வந்தாலும் வரும்.. தலைவலிக்க ஆரம்பிச்சிடும்..

அந்த தலைவலியால நைட் நம்ம சந்தோஷம் கெட்டு போகறது மட்டுமில்ல, தலைவலியால சரியா தூக்கம் கூட வராது.. அந்த தலைவலி மறுநாள் வரை தொடர்ந்து என்னை டிஸ்டர்ப் செஞ்சுக்கிட்டே இருக்கும்.. அதான் எனக்கு கோபம் வந்துடுச்சு.. ஆனா என்னைப்பத்தி உனக்கும் எல்லாமும் தெரிதாயில்லையா? உன்கிட்ட கொஞ்சம் தன்மையா பேசியிருக்கணும்.. ஆனா

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4 
 •  Next 
 •  End 

About the Author

Chithra V

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 05 - சித்ரா. வெsaaru 2019-10-02 01:46
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 05 - சித்ரா. வெPadmini S 2019-10-01 19:50
nice update Chitra!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 05 - சித்ரா. வெSrivi 2019-10-01 11:26
Hmm nice.. When will she come t out of her shell.. hope the Kerala trip brings some good and positive changes
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 05 - சித்ரா. வெAdharv 2019-10-01 10:23
Cute update Chithra ma'am 👏👏👏 Ana ninga indha trip la sadhi panadhinga.... nithi don't worry unakku naa andha Ooty etc etc trip ellam arrange seithu tharuvenakkum...ippodhaikku unga confusion ku Oru break.kudpingalam :P
oora Nala suthi katunga ji...😁 Pavam Pa she is rombha innocent..but good pair easy yaga adjust panikuranga (y) renduperum!! Look forward to read next episode. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 05 - சித்ரா. வெmadhumathi9 2019-10-01 07:10
:clap: nice epi mam.niththiyin intha manathukkulleye pesum pazhakkam eppothu maarum :Q: :thnkx: 4 this epi. :GL: waiting to read more. (y)
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top