(Reading time: 9 - 17 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

ப்ரெண்டாம்.ஒரே ஊர் போல..தாத்தா தான் அழைச்சுட்டு வந்தார்.அவங்க ஊர்ல நர்ஸா வேலைப் பார்த்துருக்காங்க..அந்த காலத்துல டெலிவரி எல்லாம் கூட இவங்களே பண்ணுவாங்க போல..அதனால அம்மாவை அவங்களே முழுசா பாத்துக்குறாங்க…”

ஐ சீ..பட் மகிழன் எல்லாமே உங்களுக்கு கிடைச்ச இன்ஃபோ தானா?உங்களுக்கு நேரடியா எந்த விஷமும் தெரியாதா?”

ம்ம் தாத்தா இருந்த வரை எதைப் பத்தியும் பெருசா தெரிய விட்டதில்ல.அவரை எதிர்த்து பேசியும் பழக்கம் கிடையாது சோ எதையும் தெரிஞ்சுக்க முயற்சி பண்ணதில்ல.அவரை பொறுத்த வரைக்கும் நான் இந்த வர்மா க்ரூப்ங்கிற சாம்ராஜியத்தை கட்டிக் காப்பாத்த பிறந்தவன்.பிஸினஸ்ல கிங் மாதிரி இருக்குற எனக்கு வீட்டைப் பத்தின எந்த பழைய விஷயமும் தெரியாதுங்கிறது தான் உண்மை ஷியாமா.”,என்றவனின் பார்வையில் ஒருவித வலி இருப்பது நன்றாகவே தெரிந்தது ஷியாமாவிற்கு.

முதல் நாள் தான் கண்ட எம்வீ தோற்றத்திற்கும் இப்போது தன்னருகில் இருப்பவனுக்கும் மலையளவு வித்தியாசத்தை உணர முடிந்தது.எதோ ஒரு உந்துதலில் கேட்டே விட்டாள்.

ஆர் யூ ஓகே மகிழன்?ரொம்ப ஸ்ட்ரெஸ்டா இருக்கீங்கனு நினைக்குறேன்..”

ம்ம் எவ்ளோ பெரிய இரும்பு மனசா இருந்தாலும் ஒரு கட்டத்துல அதுவும் சாயுறதுக்கான இடத்தை தேடத்தான் தேடும்..இத்தனை வருஷத்துல இப்படி என்னோட உக்காந்து பேச யாரும் இருந்ததில்ல.நானும் என்னை நெருங்க விட்டதில்ல.ஆனா இப்போ நடக்குற ஒரு ஒரு விஷயமும் ரொம்ப வீக் ஆக்குற மாதிரி தோணுது.

யூ நோ அல்மோஸ்ட் நீயும் நானும் ஒரே மாதிரியான கேரக்டர்ஸ் தான்.வந்தன்னைக்கே அதை உணர்ந்தேன்.யாரையும் பக்கத்துல நெருங்க விடாம பாத்துக்குறது.யாருக்காகவும் எதுக்காகவும் தன் நிமிர்வை விட்டுக் கொடுக்காம இருக்குறது.ஐ நோ உன் வேலையினால இப்படி இருக்கலாம்.

ஆனாலும் எல்லாரும் இப்படி இருக்க மட்டாங்க..இன்பேக்ட் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல சில சீனியர் ஆபிசர்ஸ் கூட அவங்க பேவர்காக எங்களை மாதிரி பிஸினஸ் பீபுள் கிட்ட கொஞ்சம் இறங்கி போவாங்க..

ஒரு கட்டத்துல வாழ்க்கையில் என்னை சுத்தி இருக்குற எல்லாருக்குமே முக்கியமா பட்டது என் பதவியும் இந்த பணமும் தானே தவிர மனுஷங்களுக்கான மதிப்புங்கிறது இல்லாமயே போச்சு..பட் நீ வந்த முதல் நாள்ல இருந்து என்னையும் ஏதோ தெருவுல நடந்து போற சாதாரண ஒருத்தனை பார்க்குற மாதிரி தான் பார்க்குற..ஐ நோ..அண்ட் யூ இம்ரஸ்ட் மீ இன் தட் வே..

இதெல்லாம் ஒரு வேளை உன்கிட்ட நான் கேஷீவலா மூவ் பண்ண காரணங்களா இருக்கலாம்னு தோணுது..இல்லனா இப்படி மனசுல இருக்குறதெல்லாம் வெளில பேசுற ஆள் இல்ல நான்.”என்று

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.