(Reading time: 9 - 17 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

அவள் கண்கள் நோக்கி மிகத் தெளிவாய் பேசிக் கொண்டிருந்தவனை ஆச்சரியப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் ஷியாமா.

அவள் முன் விரல் சொடுக்கி என்னவென கேட்க உதடு வளைத்து இடவலமாய் தலையசைத்தவள்,

ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் உங்க மனநிலைமை எப்படி இருக்கும்னு.சொல்லப் போனா நானும் கொஞ்சம் அதிகமா அட்டிட்யூட் காட்டினதுக்கு காரணம் நீங்க சொல்ற அதே பணம் தான்.எனக்கான மரியாதை இல்லாம போய்ட கூடாதுங்கிறதுல தெளிவா இருந்தேன்.

உங்களுக்கு என்னால வேலை நடக்கணும் அதே நேரம் எனக்கு என் பவர்க்கான மரியாதை கிடைக்கணும்.மத்தபடி நானும் நார்மல் ஹ்யூமன் பீயிங் தான்.சோ நான் இங்க இருக்குற வரை உங்களுக்கு என்ன ஷேர் பண்ண தோணிணாலும் நம்பி என்கிட்ட சொல்லலாம்.என்னை தாண்டி எந்த விஷயமும் வெளியே போகாது.

அண்ட் டோண்ட் வொரி கண்டிப்பா நடக்குற எல்லாப் பிரச்சனைக்கும் சீக்கிரமே முடிவு கட்டிரலாம்.ரிலாக்ஸ்..”

தேங்க்ஸ் பார் யுவர் வேர்ட்ஸ் ஷியாமா..நவ் பீலிங் பெட்டர்..”,என்றவன் சிநேகப் புன்னகையோடு கைநீட்ட பதிலுக்கு கைக்குலுக்கி சிரித்து நகர்ந்தாள் ஷியாமா.

உள்ளே சென்ற நேரம் அத்தனை பேருமே ஹாலில் அமர்ந்திருக்க ஒரு ஓரமாய் நின்றிருந்த ஆஷிக்கை மோனிஷா சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.ஷியாமா அவர்கள் அருகில் சென்று நின்று கொண்டாள்.

நான் எப்பவும் சொல்றது தான் இந்த வீட்ல வர வர ஏதோ ஒண்ணு சரியில்ல.பேய் பிசாசு எதோ இருக்கு..இல்லனா நல்லா இருந்த அப்பா எப்படி திடீர்னு இறந்து போவாரு.வந்து பார்த்த போலீஸும் ஒண்ணும் இல்லனு சொல்லிட்டு போய்ட்டாங்க..

அடுத்து இப்போ அண்ணாக்கு இப்படி ஆயிருக்கு..இதெல்லாம் சாதாரணமா தான் நடக்குதுனு இன்னும் நம்புனீங்கனா உங்களை விட பைத்தியம் வேற யாரும் இல்ல..எதோ ஒரு அமானுஷ்யம் தான் இதுக்கெல்லாம் காரணம்..எனக்கு தெரிஞ்ச பண்டிட் கிட்ட கேட்டு பார்த்துட்டேன்..அவரு..”

அனைவருமாய் சாந்திதேவியின் பேச்சிற்காக காத்திருக்க அவரோ சற்றும் அலட்டிக் கொள்ளாமல்,

நம்ம பெரிய அண்ணாவோட ஆத்மா தான் இதுக்கெல்லாம்..”

அத்தை இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினீங்க..நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..”,என்று கர்ஜித்தவனாய் முகம் சிவக்க நின்றிருந்தான் மகிழன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.