(Reading time: 8 - 15 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

அவளை கல்யாணம் செய்துக்கணும், வேணும்னா கல்யாணத்துக்கு பிறகு படிக்க வை, அது புருஷன் பொண்டாட்டியா நீங்க சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவுன்னு சொன்னாங்க, எனக்கும் அது சரின்னு பட்டுது. அதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.

நான் செஞ்ச ஒரே தப்பு உன்கிட்ட மனசு விட்டு பேசாதது தான், அப்பவே இதெல்லாம் பேசியிருந்தா உனக்கு இப்படியெல்லாம் தோனியிருக்காது, உன்னை படிக்க வைக்கணும்னு தான் நானும் நினைச்சேன். ஆனா நம்ம கல்யாண நேரத்தில் காலேஜில் அட்மிஷன் நேரம் இல்லையில்லையா? அதான் மெதுவா இதைப்பத்தி முடிவெடுக்கலாம்னு நினைச்சேன்.

கல்யாணம் ஆனதும் அழகான பொண்டாட்டி பக்கத்தில் இருக்கவும் ஆசையை அடக்க முடியல, எந்த திட்டமும் போடாம நாம பாட்டுக்கு ஒன்னாகிட்டோம், இப்போ இத்தனை மாசம் ஆகிடுச்சு, நீ கன்சிவ் ஆகாம இருக்கணுமே?"

"அதெல்லாம் ஒன்னுமில்ல மாமா, இன்னைக்கு எனக்கு ரெண்டாவது நாள். நேத்து நீங்க என்கிட்ட கோபமா இருந்ததால சொல்லல,"

"ஆமாம் பாட்டிக் கூட நீ கோவிலுக்கு போகக் கூடாதுன்னு ஏதோ சொன்னாங்க, நான் தான் அதை சரியா கவனிக்கல, அப்போ  நீ காலேஜ் போய் படிக்கிறதில் எந்த பிரச்சனையும் இல்ல, இன்னும் ஒரு மாசத்தில் அட்மிஷன் ஆரம்பிச்சிடும், நீ காலேஜ்ல சேரலாம்,"

"என்ன மாமா சொல்றீங்க, இப்ப நான் காலேஜில் போய் படிக்கணுமா? வேண்டாம் மாமா. திடீர்னு இப்போ போய் காலேஜ்ல சேர்ந்தா எல்லாம் என்ன நினைப்பாங்க?"

"இங்கப்பாரு எத்தனை வயசுல வேணும்னாலும் படிக்கலாம், அதுக்கு எல்லையே இல்லை. அப்படியிருக்க இப்போ உனக்கு பத்தொன்பது தானே ஆகுது. இப்போ எஞ்சினியரிங், டாக்டர்ல்லாம் படிக்க எக்ஸாம் எழுத வேண்டியிருக்கு, அதில் பாஸ் பண்ணா தா சீட். இல்ல அடுத்த வருஷம் தான் படிக்கணும், அதுக்காகவே +2 முடிச்சதும் ஒரு வருஷம் கோச்சிங் கிளாஸ்ல்லாம் போய் தான் அடுத்த வருஷம் காலேஜ் சேர வேண்டியிருக்கு, அதனால இப்போ நீ படிக்கிறதில் என்ன தப்பு இருக்கு, நடுவில் ரெண்டு வருஷம் படிக்க முடியாம இப்போ படிக்கிறதா நினைச்சுக்க,

அப்புறம் கல்யாணம் ஆகிடுச்சேன்னு யோசிக்கிறியா? இப்போ நிறைய பேர் கல்யாணம் செய்துக்கிட்டு படிக்கிறாங்க தெரியுமா? அதனால அதெல்லாம் ஒரு பிரச்சனையுமில்ல," என்று அவன் எடுத்து சொன்ன போதும், அவள் முகம் தெளிவில்லாமல் இருக்க,

"இங்கப்பாரு நித்தி, நீ என்னை விட குறைவா படிச்சிருக்கன்னு நான் ஃபீல் செஞ்சதே இல்ல, ஏன்னா இது நீ படிக்க வேண்டிய வயசு தான், அந்த வயசுல கல்யாணம் செய்தது தான் தப்பு. நீ தயங்கவும் சரி வீட்ல இருந்து படின்னு கூட நான் சொல்லலாம், ஆனா படிக்காதது

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.