(Reading time: 15 - 29 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 06 - சாகம்பரி குமார்

காலையில் கண் விழிக்கும்போதே அதிரதன் ஒரு தீர்மானத்திற்கு வந்திருந்தான். இரவில் நடக்கும் நிகழ்வினை இப்போதைக்கு நினைத்து பார்க்கக் கூடாது. அது எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். அவன் அதிதியுடன் சேர்ந்து வாழத்தான் வந்தான்… ஆவியுடன் இல்லை!

அதை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் வேறு விசயங்களை கவனிக்க முடியாது. அவனுக்கு வேறு வேலை இல்லையா என்ன? அதிதியை மனமாற்றம் செய்ய வேண்டும் என்பது அன்னையின் ஆணையல்லவா?. அதற்கு என்ன செய்ய வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கவனிக்கலாமே!

வீட்டு வாழ்க்கையோ காட்டு வாழ்க்கையோ … அதிதிக்கு முன் பெரிய ‘அப்பாடக்கர்’போல அவனை காட்டிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அவன் ஒரு டாக்டர்… அவளோ பள்ளி இறுதி மட்டுமே படித்தவள். கிராமத்து பெண்ணும் கூட… அவளுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விட்டால் அவன அருகில் வரவே மாட்டாள்.

அதற்கு அவன் என்ன செய்ய வேண்டும்? எல்லாம் தெரிந்த ஹீரோபோல  நடந்து கொள்ள கூடாது. ஆபத்பாந்தவன்போல ‘நான் இருக்கேன்… ‘நான் பார்த்துக்கறேன்’ என்று  அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டும். அதிதி விரும்பும் சுதந்திரத்தை அவளுக்கு தந்து ரொம்பவும் டீஸண்டா 'மிஸ்டர் ஹை க்ளாஸ்' போல் ஒதுங்கி நின்று ஆகாயம், மலை முகடு, மரம் செடி கொடிகளை பார்த்துக் கொண்டு தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டும் – முக்கியமாக காட்டு வாழ்க்கையின்போது இதை அடாப்ட் செய்தே ஆக வேண்டும். அவளை தனிமையில் விடும்போது அவன் மீது இருக்கும் வெறுப்பு(?) குறையலாம். தூரத்தில் இருந்து பார்க்கும்போது அவன் மீது ஆர்வம் கூடலாம். கூர்ந்து கவனிக்ககூட தோன்றலாம்….

[இப்ப புரிந்திருக்குமே…  நேஷனல் அவார்ட்…. இண்டர் நேஷனல் அவார்ட் வாங்கிய படங்களைத்தான் அதிரதன் பார்ப்பான் என்று புரிந்திருக்குமே! ம்…. அந்த காலத்து தமிழ் படங்களையும் கொஞ்சம் பார்த்திருந்தால் அதிதியிடம் எப்படி  நடந்து கொள்வது என்பது தெரிந்திருக்கும். ஏனெனில் அதிதியை வளர்ந்தது  தாத்தாவிற்கு எழுபது வயதல்லவா?. அவருடன் அமர்ந்து அவள் அவற்றைதான் பார்த்திருக்கிறாள். புவியியல்… சமூகவியல்.. அறிவியல் என்று எல்லா ‘இயலிலும்’ வெவ்வேறு மூலப் பொருட்கள் கொண்ட இந்த இருவரும் அப்போது ஒன்று சேர்ந்து ‘அவியல்’ ஆகப் போகிறார்களோ?]

அதிரதன்  நினைத்தது நடக்க வேண்டுமெனில்  அடிப்படை சிக்கலாக உள்ள துளசி அத்தையின் விசயத்தை கவனித்தாக வேண்டும்!.

அவனுக்குள் ஒரு உறுதி இருந்தது. துளசி அத்தை மீது தவறிழைக்கவில்லை என்பதை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.