(Reading time: 15 - 29 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

“ஏன் டாடி?” தீனமாக கேட்டான். பேப்பரிலிருந்து தலையை உயர்த்தியவர்,

“நான் எதுவும் சொல்லலை. கோர்ட் ஆர்டர்ப்பா?” என்று சொல்லிவிட்டு மெல்லிய குரலில் தொடர்ந்தார்.

“இதையாவது ஒழுங்காக செய். இல்லேன்னா இன்னும் மோசமான ப்ளான் தயாராயிடும்”

அச்சோடா!

அவனுக்கு காட்டில் வித்தை காடுவதே பெரிய விசயம். அதில் அந்த இரவு  நேரத்து விருந்தாளி அங்கேயும் வராது என்பது என்ன நிச்சயம்? அவனால் அந்த நிலமையை எதிர் நோக்க முடியுமா? டாடி… என்னோட பிரச்சினையை புரிந்து கொள்ளக் கூடாதா?

அவரிடம் அவனுடைய ஆவி கதையை எப்படி சொல்லுவான்? ‘ஒரு அறிவியல் விஞ்ஞானியாடா நீ?’ என்று சிரிக்க மாட்டாரா! அவருக்கென்ன பாதுகாப்பான சூழலிலேயே வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவனுடைய அனுபவம் அவருக்கு இருக்காதே!

அவனை பொறுத்தவரை அது ஆவி இல்லை என்பது தொந்நூற்று ஒன்பது சதவிகிதம் உண்மை! ஆனால் அந்த ஒரு சதவிகிதம் உண்மையாகி விட்டால்… ஹையோ…

“சரி நாங்க கிளம்பறோம். நாளை சந்திக்கலாம்.” என்று எழுந்தார்கள். இருவரும் வணக்கம் தெரிவிக்க, வாசலை  நோக்கி  நடந்த பாஸ்கர் திரும்பி,

“அதிரதன்…  நீங்கள் காட்டிற்கு என்ன எடுத்து செல்ல வேண்டும் என்பதை நாங்கள் கொண்டு வந்து தருகிறோம். உங்களை காட்டிற்குள் கொண்டு சேர்ப்பது எங்கள் பொறுப்பு. காலை சந்திக்கலாம்”

டிட்டோ அப்படியே  நடக்கிறதே.!. அந்த ‘ஜங்கிள் சர்வைவர்’ சீரியல் போலவே பிளான் செய்திருக்கிறார்களே… ம் எல்லாம் அவன் செய்த தவறுதான். அந்த சேனலை  அப்பா பார்ப்பார என்று 'பே பேக்கேஜி'ல் சேர்த்தது எவ்வளவு பெரிய தவறு!

“இப்படியே வாசலை பார்த்துக் கொண்டிருந்தால். வாங்க சாப்பிடலாம்” என்று அவனை அதிதி உலுக்கினாள்.

“ஆமாம், நீ எப்படி அந்த காட்டில் சமாளித்து வாழப் போகிறாய்?” என்று கேட்டான்.

“அங்கே ஒரு சிறிய ஆறு ஓடுகிறது… ஜாலியாக குளிக்கலாம். அதில் மீன் பிடிப்பேன். காய்ந்த குச்சிகளை கொண்டு தீ மூட்டி அவற்றை சுட்டு சாப்பிடுவேன். அப்புறம் சிலவகை கிழங்குகள்… பழங்கள்… காய்கள் ஆகியற்றை சேகரித்து சாப்பாடு தயாரிப்பேன்”

இவளும் அந்த அடவென்சர்  சீரியலை பார்த்திருப்பாளோ…?

“ம்… மரக்கிளையில் காட்டுக் கொடிகள் கொண்டு படுக்கை பின்னி இலைகளை போட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.