(Reading time: 15 - 29 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

தெரியவில்லையே! ஒரு வெறுப்புதானே தெரிந்தது.

இந்த கேரக்டரையும் கொஞ்சம் கவனிக்க வேணும்போல…!

“அச்சச்சோ….” என்று அதிதி கத்தும் குரல் கேட்ட்து.

“என்னாச்சு?” என்று அவன் கேட்க,

“இந்த லட்டு எல்லாம் கீழே கொட்டிக் கிடக்குது “ என்று பரபரப்புடன் அவற்றை சேகரிக்கலானாள்.

“விடு அதிதி அத்தனையும் தரையில் கிடக்குது. வேஸ்ட்தான். தூக்கி போட்டு விடு” என்வ்னை நிமிர்ந்து பார்த்தாள்.  அவனுக்கு ஏதோ பிடிபட,

“ஆங்… நான் அதை தட்டி விடலை அதிதி. ட்ரஸ்ட் மீ” என்றான்.

“அது எனக்கு தெரியும். இந்த லட்டு நெய் மிட்டாய் டேஸ்டில் இருக்கும். அப்போது இதை எனக்கு வாங்கி வந்தாலும் சாப்பிட முடியாமல் போய் விடுகிறது. ஒரு தரம் தாத்தா பிடிங்கி விட்டெறிந்தார். ஒரு முறை எலி இழுத்துட்டு போயிடுச்சு. ஒரு முறை என்ணோட ஃப்ரெண்ட்ஸ் வந்திட்டாங்க…”

“ஓ… லட்டு சாப்பிடும் பிராப்தம் உனக்கு இல்லை என்று நினைக்கிறேன். அது சரி உன் தாத்தா எதற்கு அதை விட்டெறிந்தார்.”

“அவருக்கு இந்த சித்தியை பிடிக்காது. அவங்க எதை கொண்டு வந்தாலும் தூர போட்டு விடுவார்.”

நோட்  திஸ் பாயிண்ட்… அவனுக்கு சித்தி மீது சந்தேகம் வலுத்துக் கொண்டே போனது.

“அது என்ன சொன்னீங்க… ப்ராப்தமா… வாங்க… வாங்க… நமக்கு நாளையிலேருந்து சூப்பராக காட்டில் ப்ராப்திரஸ்து…” என்று சிரித்தாள்.

“ரொம்பவும் சிரிச்சு வைக்காதேம்மா… அப்புறம் அங்கே போய் சிரிக்க மிச்சம் இருக்கணும் அல்லவா?”

அவள் கீழே சிதறி இருந்த லட்டு துகள்களை சுத்தம் செய்து விட்டு சென்றாள்.

பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் அன்றய பொழுதும் கழிந்தது. இரவும் வழக்கம்போல ‘அதுவும் நோக்க… அது என்னவென்று புரியாமல் அவனும் நோக்க…” அரைகுறையாக உறங்கினான்.

அவர்களுடைய அட்வென்சர் பயணம்பற்றி அதற்கும் தெரிந்திருக்குமோ? அவர்களுடன் தொத்திக் கொண்டு காட்டிற்கும் வந்து விடுமோ? என்ற கேள்வியை கேட்டுக் கொண்டே உறங்கினான்.

மறுநாள் விடிந்தது…

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.