(Reading time: 15 - 29 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

உறங்குவேன். கொஞ்சம் நெருப்பை மூட்டி குளிர் காயவும் செய்வேன்… அப்படி யோசனையாக பார்க்காதீங்க… இது அத்தனையும் உங்களுக்கும் செஞ்சு தரேன்”

‘ஆகா… தற்காத்து தற்கொண்டார் பேணி…’ அவன் முணுமுணுத்தான்.

“திருக்குறள்! தன்னையும்  காத்து தன்னை கொண்டவனையும் அதாவது கணவனையும்- காப்பாற்றி என்று அதற்கு அர்த்தம்.  உங்களுக்கு தமிழ் பிடிக்கும்போல.”

“ஒரு ஆர்வம்தான். இந்த குறளுக்கு வேறு அர்த்தம் உண்டு. எந்த சூழலிலும் நெறி வழுவாமல் தன்னை காத்துக் கொள்வதுடன் தன் கொண்டவனாகி கணவனையும் ஒழுக்கம் தவறாமல் பாதுகாப்பது மனைவியின் கடமை. அப்படின்னா.  நல்லவற்றை எடுத்து சொல்லி ஆற்றுபடுத்துதலும்கூட சொல்லலாம்..”

“தெரியும் நீங்க விளக்கம் சொல்ல வேண்டாம். பிற்பாடு உங்களுக்கு என்று ஒரிஜினலா ஒரு மனைவி வரும்போது அவளுக்கு இந்த குறள்…. அகநானுறு… எல்லாம் சொல்லிக் கொடுங்கள்.” அவள் சொல்லும்போதே...

“அம்மூ… செல்லம்… அதிம்மா கொஞ்சம் வர்றியா?” வாசலில் ஒரு குரல் கேட்டது.

“சித்தி….” அதிதி ஒரு துள்ளலுடன் வாசலுக்கு ஓடினாள்.

அங்கே என்ன நடக்கிறது என்று ஜன்னல் வழியே எட்டி பார்த்தான்.

அங்கே சித்தி அஞ்சலை  நின்று கொண்டிருந்தாள். என்னவாம்?

அதித்தியின் கையில் ஒரு சிறிய ஸ்வீட் பெட்டியை கொடுத்ததை பார்த்தான். அதிதியும் சிரித்துக் கொண்டே அதனை வாங்கிக் கொண்டாள். அதிதியின் கன்னத்தை தடவி சொடக்கு எடுத்து விட்டு அஞ்சலை நகர, இவள் துள்ளு நடையுடன் வீட்டிற்குள் வந்தாள்.

“என்ன அது?” விசாரித்தான்.

“ஸ்வீட்டு சார்… ஸ்வீட். சித்தப்பா ஊரிலிருந்து வாங்கி வந்திருக்கார்.”

“எதுக்கு?”

“ஊருக்கு போயிட்டு வரும் போது வாங்கிட்டு வர மாட்டாங்களா? சித்திக்கும் சித்தப்பாவிற்கு என் மீது பிரியம் அதிகம்” என்று சொல்லிக் கொண்டே அவளுடைய அறைக்கு சென்றாள்.

 அந்த ஸ்வீட் பெட்டியை மேஜை மீது வைத்து விட்டு, “குளிச்சிட்டு வந்து உன்னை சாப்பிடறேன்” என்று செல்லமாக சொல்லி சென்றாள்.

அதுகூட செல்லம் கொஞ்சுகிறாளே… என்று யோசித்தவனுக்கு,    அவள் சொன்ன “சித்தி சித்தப்பாவிற்கு என் மீது பிரியம் அதிகம் “ என்ற வார்த்தைகள் நினைவிற்கு வந்தன.

அதற்கும் அவனிடம் அஞ்சலை பேசிய வார்த்தைகளுக்கும் சம்பந்தமே இல்லையே! துளசி அத்தையின் குணம் அதிதிக்கும் வரலாம் என்று சொல்லுவதில் அன்போ பிரியமோ இருப்பதாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.