ஹேய் பிரென்ட்ஸ், Here we go after a gap ;-) Hope you all like the episode :-)
அஜய் கிளம்பிப் போன ஒரு சில நிமிடங்களிலேயே விஜய் ஆவலுடன் வந்தான். அவன் தூங்கி எழுந்து நேராக வந்திருப்பதை அவனுடைய கலைந்திருந்த முடியும், நலுங்கி இருந்த உடையும் காட்டியது.
“அம்மா, அஜய் எங்கேம்மா? கிளம்பிட்டானா??”
சந்தேகத்துடன் கேட்டான்.
“என்ன புதுசா கேட்குற விஜய். உன் அண்ணன் என்னைக்கு லேட்டா கிளம்பி இருக்கான்?”
“இல்லம்மா ஒரு சத்தமும் கேட்கலையேன்னு பார்த்தேன்...”
ரோஹினியைப் பார்த்த படி அவன் இழுக்கவும், அவளுக்கு அவன் கேட்பது புரிந்து, ‘பே பே பே’ என தன் பாணியில் விழித்தாள்.
ரோஹினி சொதப்பி விட்டாள் போலும் என நினைத்துக் கொண்ட விஜய் அதற்கு மேலே அதைப் பற்றி ஒன்றும் கேட்காமல், சாரதா மேலே தூண்டி துருவாமல் இருக்க,
“ஓகேம்மா நானும் நிரு’க்கு கால் செய்துட்டு ஆபிஸ் கிளம்புறேன்.” என்று சொல்லிவிட்டு நழுவிச் சென்றான்.
அவன் ஆபீஸ் கிளம்பும் முன் ரோஹினியுடன் தனியே பேசக் கிடைத்த இரண்டு நிமிடங்களில்,
“என்ன ரோ பயந்துட்டீயா? நான் தான் சூப்பரா ஸ்கெட்ச் போட்டு கொடுதேன்ல அப்புறம் என்ன? அண்ணா காச் மூச்ன்னு கத்துறதை கேட்கலாம்னு ஆசையா இருந்தேன்...” என்று அப்போது கேட்காமல் விட்டதை கேட்டான்.
“பயப்படலை. நீங்க சொன்னதை செஞ்சேன்”
“அப்புறம் ஏன் அவன் முகத்தை பார்த்துட்டு அலறலை?”
“அது அது... நான் சீரியஸா அவர் முகத்துல தாடி மீசை வரைஞ்சுட்டு இருந்தப்போ... அவர்... அவர் விழிச்சுட்டார்...”
“ஐயையோ! தொலைஞ்சோம் போ! உன்னை திட்டி தீர்த்திருப்பானே??”
அஜயின் உதடுகள் சுதந்திரமாக இருந்தால் தானே அவன் திட்டுவதற்கு!!! விடிகாலையில் நடந்தது நினைவுக்கு வந்து அவளுடைய முகம் கன்றியது...
“ஹ்ம்ம்... திட்டினாரு....”
“நான் சொன்ன மாதிரி மூணு மணிக்கு மேல தானே போன?”
“ஹ்ம்ம்... இரண்டு மணி போல இருக்கும்...”
“ஏன் ரோ அவசரப் பட்ட? அவன் லேட்டா தூங்குவான்னு சொன்னேன்ல... நாலு மணி மாதிரி போயிருந்தேன்னா அவன் கல்லு மாதிரி தூங்கிட்டு இருந்திருப்பான்...”
“...”
Like Bindu Vinod's stories? Now you can read Bindu Vinod's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!
Thank you.