(Reading time: 9 - 18 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 12 - சித்ரா. வெ 

றுநாள் வீட்டிலிருக்கும் அனைவரிடமும் நித்யா கல்லூரியில் சென்று படிக்கப் போகிறாள் என்பதை கார்த்திக் அறிவிக்க, ஞானசெல்வமும் குறிஞ்சியம்மாளும் மகிழ, வஞ்சி யோசனைக்குள்ளானார்.

கார்த்திக் அலுவலகம் சென்றதும் நித்யா அவர்கள் அறையில் ஏதோ வேலையாக இருக்க, வஞ்சியோ தன் அன்னையிடம், "அம்மா இப்போ எதுக்கும்மா நித்யாவை காலேஜுக்கு அனுப்பிக்கிட்டு, அதான் கல்யாணம் முடிச்சாச்சு இல்ல, அடுத்து ஒரு குழந்தை பிறந்தா பார்த்துக்கிட்டு வீட்டிலேயே இருக்கட்டு ம்மா," என்று சொல்ல,

"ஏன் வஞ்சி, நித்யா காலேஜ்ல போய் படிச்சா என்ன? பார்த்தல்ல நீ? வீட்டுக்குள்ளேயே வச்சிருந்து அவளுக்கு ஒன்னும் தெரியாம இருக்கு, இப்படி காலேஜ் போய் படிச்சா நல்ல அனுபவம் கிடைக்குமில்ல,

கல்யாணத்துக்கு முன்னயே கார்த்திக் நித்யாவை படிக்க வைக்கலாம்னு தான் சொன்னான். ஆனா நான்தான் முதலில் கல்யாணம் முடியட்டும், அப்புறம் நித்யாவை படிக்க வைன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். என் பேரன் மறக்காம இருக்கான், அதை நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு,

பொண்ணு காலேஜ்ல போய் படிக்கப் போறா, அதை நினைச்சு நீதான் முதலில் சந்தோஷப்படணும், அதைவிட்டு குழந்தை பெத்துக்கிட்டு வீட்ல இருக்கணும்னு சொல்ற, அவளுக்கு இப்போ தானே பத்தொன்பதாகுது." என்று கேட்டார்.

"ஆனா கார்த்திக்கு 29 வயசாகுதே ம்மா, இவ படிச்சு முடிக்க 3 வருஷம் ஆகும், அதுக்குள்ள 30 க்கு மேல ஆகிடும், இந்த காலத்தில் குழந்தை உண்டாகறது பெரிய வரம் போல இருக்கு, இவ படிக்கிறான்னு குழந்தையை தள்ளி போட்றது நல்லதா?"

"என்னோட பேரனுக்கு எந்த கெட்டப்பழக்கமும் இருந்ததில்லை, நல்ல உடற்பயிற்சில்லாம் செய்து உடம்பை நல்லா தான் வச்சிருக்கான், அதில்லாம குழந்தைப் பெத்துக்கிறது அவங்க விருப்பம், அவங்க ரெண்டுப்பேரும் பேசி நல்ல முடிவா தான் எடுத்திருப்பாங்க, நீ மனசை போட்டு குழப்பிக்காத," என்று தேற்றினார்.

ஆனாலும் வஞ்சி மனதில் உள்ள குழப்பம் தெளியவில்லை, குறிஞ்சியம்மாள் ஓய்வெடுக்க சென்றதும் மகளிடம் வந்தவர், "நித்திம்மா உனக்கு காலேஜ் போய் படிக்க ஆசையா இருக்கா டா?" என்றுக் கேட்டார்.

"கொஞ்சம் பயமா தான் இருக்கும்மா, ஆனா படிக்கணும்னு ஆசையும் இருக்கு, ஆனா +2வில் படிச்சதெல்லாம் மறந்துப் போச்சு,  மாமா ஆசைப்பட்றாங்க அதுக்காகவது படிக்கணும் ம்மா, அவங்கக்கிட்ட யாராவது உன்னோட பொண்டாட்டி என்ன படிச்சிருக்கான்னு கேட்டா அவங்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.