என அவன் சொல்ல போட மாரி....இந்த முத்துவ பாத்த உனக்கு எப்படி தெரிது இன்னும் ஒரு மாசம் தான் பேங்க் லோன் சான்க்ஷன் ஆனதும் ஐயா முத்து மொபைல் ஸ்டோர்ன்னு சென்னை சிட்டுல மெயின் ரோட்டூல ஒரு கடைய போட்டு ஓபன் பண்ணி ஜம்முன்னு ஓக்காந்ததுருவன் அப்புறம் நானே ராஜா நானே மந்திரி என பெருமை பீத்த டேய் டேய் டேய் முதல்ல நீ உன் மொபைல்க்கு ரிச்சார்ஜ் பண்ணு அப்புறம் கடையயோ மாளிகையோ ஓபன் பண்ணு டா மாப்ள முத்து என மாரி கலாய்க்க ரொம்ப பேசாத டா நீ எங்க அக்காவ கட்டும் மோது அம்பானி ஆக போறேன் பில் கேட்ஸ் ஆக போறேன்னு அப்படி இப்படின்னு பில்டப் விட்டு எங்க அக்காவ மடக்கி கல்யாணம் பண்ணிட்ட இப்ப வரைக்கும் அதே அழுக்கு வண்டிய தான் தொடைக்குற போட போட நீயெல்லாம் பேச தகுதியே இல்ல என இருவரும் மாறி மாறி அவர்களை டேமேஜ் செய்து கொண்டிருக்க மன்வீரும் கவினும் ஒரு வழியாக இடத்தை ஜீப்பில் வந்து இடத்தை தேடி அடைந்தனர் அண்ணே இங்க மாரி ஷெட்டு எங்க இருக்கு என வழி போக்கன் ஒருவனை கேட்க வாயில் இருந்து சுருட்டை எடுத்து ஊதிய கிளவன் அதுவா இதோ இப்படியே போங்க .....அது வந்துரும்.... என சுருட்டை இழுப்பதை போல் கிளவன் இழுத்து சொல்ல சர்ரென ஜீப்பை மேடு பள்ளமான இடத்தில் வளைந்து வளைந்து ஓட்டி சென்றான் மன்வீர்.
மா ....மா வென மாடுகள் கத்த அந்த இடமே அடர்ந்த மரங்களோடு புதர் போல இருந்தது.சர்ரென பிரேக்கை அழுத்தி ஜீப்பை நிறுத்தி இருவரும் உள்ளே சென்றனர் அப்போது அழுக்கு லாரி ஒண்ட்ரை மாரி கழுவி கொண்டிருக்க முத்து பாடி கொண்டிருக்க வைகோலால் அமைக்கப்பட்ட கொட்டாய்யின் உள்ளே வடிவேலு வாட்டர் சப்பளை தண்ணீர் லாரி இருந்ததை கண்டவுடன் குடு குடு வென உள்ளே ஓடி கம்பியை பிடித்து லாரிக்குள் ஏறி கேன்களை தூக்கி தூக்கி போட்டு ஜெய்யை தேடினர்..அப்போது ஷ் ஷ் ஷென மூச்சு பேச்சு இல்லாமல் அங் அங்கே ரத்த காயங்களோடு படுத்து கிடந்த ஜெய்யை கண்டனர். தோ ஜெய் இங்க இருக்கான் கவின் எனமன்வீர் சொல்லி கொண்டே ஜெய்யை தூக்கி அவன் கன்னத்தை தட்ட அசையாமல் இருந்தான் ஜெய் காதை வைத்து நெஞ்சில் கேட்ட போது டப் டப் பென்று இதயம் அடித்தது ஜெய் இன்னும் உயிரோடு தான் இருக்கிறான் என்பதை அறிந்தவுடன் கவின் ஜெய்ய தூக்கு சீக்கிரமா ஹாஸ்பிடல் போனும் என மன்வீர் கத்தினான்.இப்பெல்லாம் எங்க இருந்தாலும் இந்த தண்ணி கேன் உருண்டு ஓடுற சத்தம் தான் டா கேக்குது சை இதுல இருந்து முதல்ல வெளிய வரணும் டா சாமி என மன பிரம்மையன நினைத்து முத்து பேசி கொண்டிருக்க மன்வீரும் கவினும் ஜெய்யை தூக்கி கொண்டு கொட்டாய்யில்ருந்து வெளியே வந்தனர் அதை பார்த்த மாரி கையில் அழுக்கு பக்கெட்டை வைத்து கொண்டு ஆ..என வாயை