(Reading time: 10 - 20 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

“விசயம் அப்படி… அண்ணா… நாம   நாளைக்கே ஊட்டிக்கு போகலாமா?”

“ஈஸி…. ஈஸி முன்னி… அண்ணா இப்போதானே வந்திருக்காங்க… பொறுமையா வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.” பின் இருக்கையில் இருந்து அப்பா குரல் கொடுத்தார்.

ஆனால் மறுநாளே தங்கை கற்பகம் கிருபாவை பிடிவாதம் பிடித்து ஊட்டிக்கு அழைத்து போனாள். அங்கேதான் முதல்முதலாக துளசியை பார்த்தான். அமைதியான அழகான பெண். அவளுடைய விருந்தோம்பலும் மிக அருமையாக இருந்தது. அவளுடைய பெற்றோருக்கு அவள் ஒரே பெண். அவளுடைய விருப்பங்களுக்கு அங்கே மதிப்பு இருந்தது.

கிருபா, கற்பகத்துடன் ஊட்டியை சுற்றி காட்ட துளசி கிளம்பியபோது அவளுடைய அப்பாவும் வந்தார். அவர் அந்த ஊரிலேயே வளர்ந்தவர் என்பதால் அந்த ஊரின் தொன்மை சிறப்புகளும் தெரிந்து வைத்திருந்தார். அவருடைய கூடுதல் விளக்கத்தில் அன்றைய நாள் அழகாக கழிந்தது.

இருவரும் மாலை கோவைக்கு திரும்பும்போது கிருபாவிடம் கற்பகம் கேட்டாள்.

“அண்ணா… துளசியை உனக்கு பிடித்திருக்கிறதா?”

“அவளை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? ரொம்பவும் நல்ல பெண். அழகாக அறிவாக இருக்கிறாள். அதே சமயத்தில் வெள்ளை மனமும் கொண்டவளாக இருக்கிறாள். என் தங்கை மட்டும்தான் இன்னஸண்ட் எண்று நினைத்தேன்… அவளும் அப்படித்தான் இருக்கிறாள்”

“அதெப்படி நீ கண்டுபிடித்தாய்?”

“அவங்க வீட்டில் நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது துளசியின் சித்தி பொண்ணு ஒருத்தி வந்தாளே.. அவள் பெயர்கூட…”

“அஞ்சலை… ஐய எனக்கு அவளை பிடிக்காது… ரொம்ப ஜபர்தஸ்த்…”

“ரொம்ப கன்னிங்.. வயதிற்கு மீறிய மேக்கப்.! நாம் வந்திருக்கிறோம்னே வந்திருப்பாள் போலிருக்கு?”

“நாம் வந்திருக்கிறோம்னு இல்லை… நீங்க வந்திருக்கீங்கன்னு வந்திருப்பா. நீதான் ஸ்மார்ட்… ஹேண்ட்சம் ஆச்சே. ஜெமனியிலேயே கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் நிறைய இருக்காங்களே…”

“நீ ஏம்மா புதுசா கதை கட்டுகிறே… அப்படியெல்லாம் இல்லை. ம்… அந்த அஞ்சலை அதனால்தான் துளசியை மட்டம் தட்டி பேசினாளா?”

“ஆமாம்… உனக்கு முன்னாடி அவளை அசிங்கப்படுத்தனும்னு செஞ்சா. ஆனா நீ சொல்லுண்ணா துளசிபத்தி நீ என்ன நினைக்கிறே”

“என்ன நினைக்கணும்?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.