(Reading time: 8 - 16 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 01 - ஜெய்

கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் அய்யா சொன்னார்... காணும் கனவுகள் அனைத்தும் சாத்தியமாகிறதா.... இல்லை நம்மால் சாத்தியபடாததை கனவில் கண்டு மகிழ்கின்றோமா... இங்கும் ஒரு பெண் கனவு காண்கிறாள்... அதுவும்  80’s kid... பாரம்பர்ய ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த பெண் காணும் கனவு மெய்ப்படுமா... உங்களுடன் நானும் அறிய ஆவலுடன் இருக்கிறேன்... வாருங்கள் அவளின் கனவுகளுடன் பயணிப்போம்... 

ரணு சரணு சுரேந்திர சன்னுத சரணு ஸ்ரீ  சதி வல்லபா

  சரணு ராக்ஷஸ கர்வ சம்ஹர சரணு வேங்கட நாயகா

  ஸ்வாமி ஸ்ரீ  ரகு நாயகா  சரணு சரணு ஹரே......”

மைலாப்பூரின்  மாடவீதிகளை சுற்றி  உஞ்சவ்ரித்தி கோஷ்டி திருப்பாவையை முடித்து தியாகய்யரின் பாடலுடன் வலம் வர ஆரம்பித்தது.... மார்கழி மாத அதிகாலை நான்கு மணி குளிரில் பற்களும், உதடுகளும் கடமும், மிருதங்கமும் வாசிக்க மூக்கிலிருந்து மோர்சிங் சத்தம் வர,  நம் நாயகி பதிமூன்று  வயது  மைத்ரேயி  இன்று நெய்வேத்யம் சர்க்கரை பொங்கலா, இல்லை வெண் பொங்கலா என்று ஒற்றையா, ரெட்டையா போட்டபடியே  ஆர்மோனியத்தை மீட்டினாள்....

1980 – ஆம் வருடம்...  அந்த காலத்தில் வாழ்ந்த குழந்தைகள் நிஜமாகவே கொடுத்து வைத்த குழந்தைகள்.... பெரிய பெரிய கனவுகள் இல்லாமல், கிடைக்கும் மிகச்சிறிய விஷயங்களில் கூட அதீத மகிழ்ச்சியை  கண்ட மனது... இருப்பது சிறிதெனினும் அதையும் ஒளித்து வைத்துக் கொள்ளாமல் மற்றவருடன் பகிர்ந்து வாழ்ந்த வாழ்வு....  அடுத்த வீட்டில் இருப்பவரை பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா,சித்தி, மாமா, மாமி  என்று  அழகாக உறவு முறையில் அழைத்து மகிழ்ந்த அழகு....  தன்னை விட பெரியவரை மதிக்கும் பண்பு... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...

இந்த பொற்காலத்தில்  மயிலாப்பூரில் இருக்கும் நாச்சியப்ப செட்டித் தெருவில் கூட்டுக் குடும்பமாக  வாழ்ந்து வருபவர்கள் சுப்பிரமணியம், கற்பகம் தம்பதியர்... அவர்களுக்கு மூன்று பிள்ளைகள், ஒரு பெண்... இவர்கள் ஐந்து  குடும்பமும் அந்த வீட்டிலேயே வசித்து வருகிறார்கள்...  தனித் தனி பகுதிகளாக அவர்களின் வீடு அமைந்திருக்கும்...

மூத்த மகன் வேணு, சீதா... அவர்களுக்கு இரு பிள்ளைகள்... ரகுநந்தன், பத்ரி...ரகு கல்லூரி இரண்டாம் ஆண்டும்... பத்ரி பன்னிரெண்டாம் வகுப்பும் படிக்கின்றனர் ....

இரண்டாவது கிருஷ்ணன், ராதா அவர்களுக்கு ஒரு மகன், மகள்... காமேஷ், கல்யாணி... காமேஷும் பத்ரியும் ஒரே வகுப்பில் படிக்கின்றனர்....  கல்யாணி  பத்தாம் வகுப்பில் படிக்கிறாள்...

மூன்றாவது மாதவன், விசாலம் இவர்களுக்கும் ஒரு மகன், மகள்.... ராம், ரஞ்சனி....இரட்டைப்பிள்ளைகள்... படிப்பது ஒன்பதாம் வகுப்பு....

சுப்பிரமணியம் தம்பதியரின்  ஒரே பெண் ஷ்யாமளா.... கணவர் அனந்து, மற்றும் மாமியாருடன் அதே வீட்டில் வசிக்கிறார்.... ஷ்யாமளாவின் சீமந்த புத்ரிதான்  மைத்ரேயி.... கல்யாணமாகி ஆறு வருடங்கள் கழிந்து பிறந்த பெண்... மகன் மாதவன்....  மைத்ரேயி ஏழாம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.