(Reading time: 8 - 16 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

வகுப்பிலும். மாதவன் ஐந்தாம்   வகுப்பிலும் படிக்கின்றனர்...  வெகு வருடங்கள் கழித்து பிறந்த பெண் என்பதால் சற்றே மற்றவரை விட செல்லம் அதிகம் மைத்ரேயிக்கு...

அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டின் பெயர்  எண்பத்து மூன்று... ஆம் அந்த வீட்டின் எண்ணே பெயராக மாறிய விந்தை அங்கு வாழும் மனிதர்களால்தான்... இவர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வருவதை எண்பத்து மூணுக்கு இன்னைக்கு வறோம் என்று கூறும் அளவு வீட்டின் மனிதர்களை விட பிரசித்தி பெற்றது....

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று  பாடுவதெல்லாம் சினிமாவில் மட்டுமே முடியும் என்று கற்பகம் பாட்டிக்கு தெளிவாகத் தெரிந்த காரணத்தால் அனைவரையும் தனித்தனியாக வைத்துவிட்டார்...  நுழைவது ஒரே கதவாக இருந்தாலும்,  தனித் தனி பகுதிகள்தான் .... கீழே மூன்றும் மேலே இரண்டுமாக குடித்தன பகுதிகள்... ஒரு ஒரு பகுதியும் ஹால், சமையலறை, படுக்கையறை என்று இருக்கும்.. அனைத்து பகுதிகளையும் இணைக்கும் இடம் நடுவிலிருக்கும் பெரிய மித்தம்.... இவர்கள் அனைவரின் ஜமா கூடுவதும் அங்குதான்....  சுப்பிரமணியம் சமையல்காரராக இருந்து சிறுக சிறுக சேர்த்த பணத்தில் கட்டிய வீடு அது.... அவரின் பெரிய பிள்ளையும் அப்பாவுடன் சமையல் வேலைக்கு செல்பவர்.... இரண்டாவது மகன் LIC-யிலும் மூன்றாவது மகன் கணக்கராகவும் பணி  புரிகின்றனர்... ஷ்யாமளா ஆசிரியையாக உள்ளார்.... அவரின் கணவரும் LIC-யில்தான் பணிபுரிகிறார்...

இத்தனை பேர் இருக்கும் வீட்டில் சுற்றித் திரியும் பட்டாம்பூச்சியாக வலம் வருபவள் நம் வருங்கால நாயகி மைத்ரேயி .... மிக ஆச்சாரமான குடும்பம் இவர்களுடையது.... ஆண்கள் காலை, மாலை சந்தி செய்யாமல் வீட்டினுள் கால் வைக்க முடியாது... அதே போல் பெண்கள் அத்தனை ஆச்சார. அனுஷ்டானங்களையும் கட்டாயமாக பின்பற்றியாக வேண்டும்... இதில் கற்பகம் மாமி படு கெடுபிடியாக இருப்பார்.... சியாமளாவின் மாமியாரும் அப்படியே...

கற்பகத்தின் பெரிய மாட்டுப்பெண் மிகப் பெரிய பாகவதப் பரம்பரையிலிருந்து வந்தவர்... அவர்கள் வீட்டு பிள்ளைகளுக்கும், அண்டை, அயலார் வீட்டு பிள்ளைகளுக்கும் அவர் பாட்டு சொல்லிக்கொடுக்கிறார்... இரண்டாது மாட்டுப்பெண் ஹிந்தி பண்டிட்... மாலை வேளைகளில் நிறைய குழந்தைகளுக்கு ஹிந்தி கற்றுத் தருகிறார்... மூன்றாவது மாட்டுப்பெண் தன் மாமியாருடன் சேர்ந்து தேவைப்படுபவர்களுக்கு பட்சணங்கள் செய்து தருகிறார்...

ஷ்யாமளாவின் மாமியார் கைவேலைகள் அபாரமாக செய்வார்.... அதே போல் பெண்களுக்கான உடைகள் தைப்பதிலும் திறமையானவர்... கண் பார்ப்பதை கைகள் செய்யும்... படத்தை காட்டினாலே போதும்... அந்த மாடலில் உடை அடுத்த ஒரு மணி நேரத்தில் தயாராகிவிடும்.... நாச்சியப்ப செட்டித் தெருவிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் இவர் தைக்கும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.