(Reading time: 8 - 16 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

ஜாக்கெட்டுகளுக்கு பயங்கர மவுசு..... சுறுசுறுப்பான குடும்பம்... யாரும் சோம்பலாக உட்கார்ந்து இந்த வீட்டில் பார்க்க முடியாது....

இதோ உஞ்சவ்ருத்தி இவர்கள் வீட்டின் முன் முடிகிறது....

“ஹரஹர நமப் பார்வதி பதயே....”, பெரியவர் சுப்பிரமணியம் குரல் கொடுக்க

 “ஹர ஹர மகாதேவா....”, என்று வாண்டுகள் அவரைப் பின்பற்றினர்...

அந்த வீட்டின் பெண்கள் இவர்களை நமஸ்கரித்து உள்அழைக்க அனைத்து வீடுகளுக்கும் பொதுவாக இருக்கும் அறையில்  தம்புரா, ஆர்மோனியம், ஜால்ரா என்று வாத்தியங்களை  கொண்டு வைத்தனர் அந்த வீட்டு பொடிசுகள்... இந்த அறையில்தான் அனைத்து குழந்தைகளும் பாட்டு, மிருதங்கம், நடனம் என்று கற்றுக்கொள்ளும்... இதே போல் பின்பக்க கொல்லையில் ஒரு தனி அறை உண்டு... வீட்டு விலக்காகும் பெண்கள் அங்கு இருப்பார்கள்... ஏகப்பட்ட பெண்கள் என்பதால் அந்த அறையும் மாதத்தில் பல நாள்கள் occupied ஆகவே இருக்கும்....

அனைவரும் தங்கள் பகுதிக்கு சென்று காலை வேளை பெட்ரோல் அருந்த  தயாராகினர்...   வாகனத்திற்கு எப்படி பெட்ரோல் போட்டால்தான் ஓடுமோ அப்படித்தான் பல பேருக்கு காபி... இதில் பல இல்லத்தரசிகள் மதிய உணவு வரை பெட்ரோலிலேயே ஓட்டும் அவலநிலை இன்றும் இருக்கிறது...

“மைத்தும்மா காப்பியை குடிச்சுட்டு போய் ரெண்டு குடம் தண்ணி மடியா பிடிச்சுண்டு வாடா கண்ணா... அம்மாக்கு ஸ்கூல்க்கு நாழியாறது.... சமையல் ஆரம்பிக்கணும்....”

“அம்மா நேக்கு ஆர்மோனியம் வாசிச்சு கையெல்லாம் வலிக்கறதும்மா... மாதுக்குட்டி இன்னைக்கு நீ போடா... நாளைக்கு உன் turn நான் போறேன்...”

“இந்தக் கதையே வேண்டாம்... போன வாரம் இப்படித்தான் சொல்லிட்டு அப்பறம் மறுநாள் கை சுளிக்கிடுத்துன்னு பொய் சொல்லி என்னையே பிடிக்க வச்ச... பாதி நேரம் தூங்கிண்டே வெறும் ஸ, ப, ஸ வாசிச்சது உனக்கு வலிக்கறதா.... அம்மா அவ கதை விடறா நம்பாத....”

“டேய் ப்ளீஸ் இன்னைக்கு ஒரு நாள்டா செல்லக்குட்டி... அந்த அடிபம்ப்புல அடிச்சா கையெல்லாம் வலிக்கறதுடா.... நீ பீமன் மாதிரிடா... அசால்ட்டா அடிப்ப...”

“நான் குண்டா இருக்கேன்னு கிண்டல் பண்றயா... இதுக்காகவே உனக்கு ஹெல்ப் பண்ண மாட்டேன்.... போ நீயே போய் அடி....”

“ச்சே ச்சே... மாது செல்லம்... உன்னைப் போய் நான் கிண்டல் பண்ணுவேனா... நீ பீமன் மாதிரி பராக்ரமசாலின்னு சொன்னேன்டா... ப்ளீஸ்டா... அடிச்சு குடுடா... நீ அடிக்க மட்டும் செய்... மாடிக்கு நான் தூக்கிண்டு வரேன்....”

“ஒழிஞ்சு போ.... இன்னைக்கு ஒரு நாள்தான்.... அதுவும் ஒரு குடம்தான் அடிப்பேன்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.