(Reading time: 9 - 17 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

தொடர்கதை - வாழ்வே மாயம்! - 08 - ரவை

" க்கா! அந்த டிடெக்டிவ் ஏதாவது சொன்னாரா?"

" நிர்மலா! இந்த அதிசயத்தை பற்றி கேட்டியோ?"

" சொல்லுக்கா! எந்த அதிசயம்?"

" இந்த கொரோனா வியாதி, இந்தியாவுக்கு துபாயிலிருந்தும், இதாலியிலிருந்தும், சீனாவிலிருந்தும், அவன் கொண்டுவந்தான், இவன் கொண்டுவந்தான், அவன்கிட்ட இருந்து இந்தியனுக்கு தொற்றிக் கொண்டது, காற்றிலே பரவாது, அப்படி இப்படின்னு சொல்லி நம்மையெல்லாம் வீட்டுக்குள்ளே முடக்கி வைச்சிருக்காங்களே, பிரிட்டீஷ் இளவரசருக்கும், பிரிட்டீஷ் பிரதமருக்கும், கனடா பிரதமரின் மனைவிக்கும் கொரோனா டெஸ்ட்லே பாசிடிவ்னு வந்திருக்காம், இது அதிசயம் இல்லையா?

அவங்க என்ன துபாயிலே இருந்து வந்தவன் தும்மும்போது பக்கத்திலே இருந்தாங்களா, கொரோனா பிறந்ததே, அந்த சீனாவிலே உள்ள வுஹானுக்கு போனாங்களா, எப்படி வந்தது, இவங்களுக்கு?"

" அது மட்டும் இல்லேக்கா! ஒரே விமானத்திலே, பக்கத்து பக்கத்திலே மணிக்கணக்காக அமர்ந்து பயணம் செய்தவங்க முந்நூறு பேரிலே, மூணு பேருக்குத்தான் வியாதியாம், மற்றவங்க நல்லாத்தான் இருக்காங்களாம், ......."

" இந்த வியாதி வந்தா, குணப்படுத்த மருந்து இன்னும் கண்டுபிடிக்காத காரணத்தினாலே, உயிர் போகறதை தடுக்கமுடியாதுன்னு பயமுறுத்தறாங்களே, வியாதி வந்தவங்களிலே நூற்றுக்கு ரெண்டு பேர், அஞ்சு பேர், ஏழுபேர்தான் சாகிறாங்க, மற்றவங்க உயிர் பிழைத்து நல்லபடியா வாழறாங்களாம்......."

" சரிக்கா! நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லலே!"

" நிர்மலா! எதுக்கு கொரோனா பற்றி சொன்னேன்னா, இது வியாதியில்லே, மனுஷனோட அகம்பாவத்தை, திமிரை, எதேச்சாதிகாரத்தை, அடக்கி, தனது இயலாமையை உணரவைத்து, அடக்கமா, ஒற்றுமையா, அன்பா, வாழ ஆண்டவன் ஒரே நேரத்திலே, உலகத்துக்கே, அனுப்பியிருக்கிற ஏவுகணை!

புரிஞ்சுதா?"

" சரி, அதனாலே நமக்கு என்னாச்சு? கழுத்தறுக்க, கத்தியோட வருவானே நம்ம அருமைத் தம்பீ! சொத்தைக் கொடுன்னு கத்தியைக் காட்டி மிரட்டுவானே, அதுக்கு வழி என்னக்கா?"

" சொல்றேன், போனிலே வேண்டாம், நேரிலே வா! வரும்போது, விமலாவையும் கூட்டிக்கிட்டு வா!"

அக்கா ஏதோ மர்மமான செய்தி சொல்லப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பில் இருவரும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.