(Reading time: 9 - 17 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

ஓடிவந்தனர்.

" விமலா! வத்சலாவுக்கு சொன்னியா? அவளும் வரேன்னு சொன்னாளா?"

" அந்த திமிர் பிடிச்சவளைப்பற்றி என்கிட்ட பேசாதேக்கா! கமிஷனர் பெண்டாட்டின்னு திமிர் பிடிச்சு அலையறா!"

" என்னடீ ஆச்சு, திடீர்னு?"

" வத்சலா கடைக்குட்டி, நம்ம மூணுபேருக்கும் செல்லம் தானே? அவளை பாசமா, 'வத்சு'னு கூப்பிட்டதுக்கு, 'வத்சு' 'கொத்சு'ன்னு இனிமே கூப்பிட்டேன்னா, இனிமே உன்னோட பேசமாட்டேன்னு மிரட்டினா! நீயென்ன மிரட்டறது, நானே உன் உறவையே 'கட்' பண்ணிக்கிறேன்னு போனை கட் பண்ணிட்டேன்."

" அவ போன்காலா, நீ அவளுக்கு செஞ்சியா?"

" அவதான் கூப்பிட்டா,......"

"எதுக்காக கூப்பிட்டா?"

" தெரியலையே, எடுத்த எடுப்பிலேயே, எரிந்து விழுந்தாள், அதான்......."

" காரியத்தை கெடுத்துட்டியே, எங்களுக்கெல்லாம் போன் பண்ணாதவ, உனக்கு மட்டும் பண்ணினான்னா, ஏதோ உன்னிடம் எங்களுக்கு தெரியக்கூடாத விஷயம் சொல்வதற்காகத்தானே இருக்கும், கெடுத்துட்டியே, காரியத்தை! அவ புருஷன், போலீஸ் கமிஷனர் ரஞ்சித், விசாரித்ததிலே, ஏதாவது தெரிஞ்சிருக்கும், அதை உன்னிடம் சொல்ல நினைச்சிருப்பா......போச்சு, எல்லாமே போச்சு,...."

" விமலா! அக்கா இவ்வளவு சொல்றாங்களே, உடனே பேசுடீ, வத்சுகிட்ட!"

" வேண்டவே வேண்டாம், நிர்மலா! இப்ப நீ சொன்னியே, 'வத்சு'ன்னு, அது வாய் தவறி வந்துடும்! அவ்வளவுதான்! உறவே கட் ஆயிடும்."

" இப்ப மட்டும் என்னவாம்? விஷயத்தை தெரிஞ்சிகிட்டு, கட் பண்ணுடீ!"

வேண்டா வெறுப்பாக, விமலா போன் செய்தாள், வத்சலாவுக்கு!

" விமலா! ஸ்பீக்கரிலே போடு, எங்களுக்கும் கேட்கணுமில்லே....."

" ஹலோ! விமலா பேசறேன்.........."

" மேடம் விமலாவா? மரியாதைக்குறைவா, போனை 'கட்' பண்ணினாங்களே, அந்த மேடமா? இருக்காதே! அந்த மேடத்துக்கு ரோசம் அதிகமாச்சே.........(பலத்த சிரிப்பு)"

விமலா, சகோதரிகளை பார்த்தாள்.

"பரவாயில்லே, பேசு" என ஜாடையிலே இருவரும் சொன்னார்கள்.

" என்னை தப்பா நினைச்சுட்டியா, பைத்தியக்காரி! போனிலே சார்ஜ் தீர்ந்துபோச்சுடீ, அன்னிக்கி!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.