Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 06 - ஜெய் - 5.0 out of 5 based on 2 votes
Kanavu Meippadum
Pin It

தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 06 - ஜெய்

ற்பகம் பாட்டியின் சத்தத்தில் முற்றம் முழுக்க அமைதியாக, மைத்தியின் விசும்பல் சத்தம் கேட்டது...

“எதுக்கு இப்போ கண்ண கசக்கற மைத்தி... பாட்டி சரியாத்தான் சொல்லி இருக்கா... இங்க பாருங்கோ சார் நீங்க கேட்டது ரொம்ப சந்தோஷம்... அடுத்த ஆத்து குழந்தைன்னு பார்க்காம வந்து கேட்டு இருக்கேள்... ஆனா பாருங்கோ இதெல்லாம் எங்களுக்கு சரிப்பட்டு வராது... தயவு செய்து தப்பா எடுத்துக்காதீங்கோ....”, சுப்பிரமணியம் தாத்தா இதுதான் இறுதி முடிவு என்பது போல் பேச, கண்ணன் அனந்துவின் முகம் பார்த்தார்....

அவருக்கும் தன் மாமனார் சொல்வது சரி எனப்பட, “மாமா சொல்றது சரி கண்ணன் சார்... இங்க பசங்களுக்கே  காலேஜ் படிக்கற வரைக்கும்தான் விளையாட்டு எல்லாம், அதுவும் சும்மா பொழுது போக்கா விளையாடத்தான் அனுமதி கொடுத்து இருக்கோம்... இந்த அகாடமி போய் கத்துக்கறதெல்லாம் சரியா வராது சார்...”, தன் மாமனாரை ஒத்து பதில் கூறினார்...

“சார் நான் வந்து திடீர்ன்னு உங்ககிட்ட சொன்னவுடனே உங்களால பதில் சொல்ல முடியலன்னு நினைக்கறேன்... நீங்க டைம் எடுத்துட்டு சொல்லுங்க... ஒண்ணும் அவசரம் இல்லை.... எந்த முடிவா இருந்தாலும் பத்ரி தம்பிக்கிட்ட சொல்லி விடுங்க...”

“இதுல யோசிக்கலாம் ஒண்ணும் இல்லை சார்... என்னைக்கா இருந்தாலும் இதுதான் முடிவு...”, தாத்தா தீர்மானமாக சொல்ல, சற்று வருத்தத்துடன் கண்ணன் கிளம்பினார்....

கண்ணனும், துளசியும் கிளம்ப, அழுதபடியே தங்கள் பகுதிக்கு சென்றாள் மைத்தி...

“என்ன தாத்தா இப்படி பண்ணிட்டேள்.... அவர்கிட்ட பேசிட்டு சொல்றோம்னானும் சொல்லி இருக்கலாம்... இப்படி பட்டுன்னு முடியாதுன்னு சொல்லிட்டேளே...”, மைத்தி அழுது கொண்டு சென்றது பொறுக்காமல் ரகு  தாத்தாவிடம் கேட்டான்...

“இதுல யோசிக்க என்னடா இருக்கு... உங்களையே ஒரு வயசுக்கு மேல விளையாட வெளில அனுப்பறதில்லை... இதோ காலேஜ் சேர்ந்தப்பறம்  நீ எத்தனை நாள் விளையாடப் போற சொல்லு...”

“தாத்தா எனக்கு டைம் இல்லை.... அதனால போறதில்லை... அதுவும் இல்லாம எனக்கு விளையாடியே ஆகணும்ன்னு வெறி எல்லாம் இல்லை தாத்தா...”, ரகு சொல்ல, இருந்தும் தாத்தா தன் முடிவில் பிடிவாதமாக இருந்தார்...

“தாத்தா நீங்க மைத்தி விளையாடும்போது பார்க்கணும்... அவ்ளோ நன்னா பந்து போடறா தாத்தா.... அவக்கிட்ட ஒரு அசாதாரண திறமை இருக்கு... எல்லாருக்கும் விளையாட ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல இப்படி டெக்னிக்கா பால் போட வராது.... ஆனா மைத்தி போடற பால் அவ்ளோ சூப்பரா ஸ்பின் ஆகி வரும்... நீங்க அடுத்த வாரம் எங்ககூட வந்து அவ

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4 
 •  Next 
 •  End 

About the Author

Jay

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Check out Jay's interviewhttps://www.chillzee.in/chillzee/chillzee-featured/11800-independence-day-special-chillzee-writer-jay-discussion 
Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 06 - ஜெய்AdharvJo 2020-07-08 21:17
Lively update Jayanthi ma'am 👏👏👏👏👏👏 something is better nothing situation la nikuranga mythri :sad: not everytime we get what ever we wish for!!
glad oru granny yavdhu help panurangale 👍 look forward to see what happens next . Thank you!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 06 - ஜெய்SriJayanthi 2020-07-13 09:55
Thanks for your comments AdharvJo... Namakkendru iruppathu yeppavum kidaikkum... Paarkalaam maithikku kaalam enna vaithirukkindrathu ....
Reply | Reply with quote | Quote
+1 # தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 06 - ஜெய்Vinoudayan 2020-07-08 19:01
Very nice epi sis👍 Eagerly waiting for next update :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 06 - ஜெய்SriJayanthi 2020-07-13 09:54
Thanks for your comments Vinoudayan
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 06 - ஜெய்madhumathi9 2020-07-08 11:58
:clap: nice epi.eagerly waiting 4 next epi (y) :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 06 - ஜெய்SriJayanthi 2020-07-13 09:53
Thanks for your comments Madhumathi
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 06 - ஜெய்ரவை .k 2020-07-08 07:32
Good morning dear Jai! கதை ரொம்ப யதார்த்தமா போகுது! அந்த அழகு பிரமிக்க வைக்குது! பலே?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 06 - ஜெய்SriJayanthi 2020-07-13 09:53
Thanks for your comments Ravai...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 06 - ஜெய்Saaru 2020-07-08 06:00
Ha ha inda mythi pulla sohana triudu
Paati ungala vachi ellam sadika pora
Super jay
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 06 - ஜெய்SriJayanthi 2020-07-13 09:53
Thanks for the comments Saaru... Paatiyaala entha alavukku help pannamudiyum paarkkalaam
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top