(Reading time: 8 - 16 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

விளையாடறதை பாருங்கோ தாத்தா....”

“ஏண்டா அவ விளையாடவே வர மாட்டான்னு சொல்லிண்டு இருக்கேன்... நீ என்னையும் சேர்த்து வர சொல்ற... இங்க பாருங்கோ  பசங்களா... இனி அவ 83லையே கல்யாணி, ரஞ்சனி கூட விளையாடினா போறும்... உங்களோட தோட்டத்துக்கு கூட கூட்டிண்டு போக வேண்டாம்... ஆத்துக்குள்ளயே என்ன முடியுமோ அதை விளையாடுங்கோடி பொண்ணுங்களா...”, தாத்தா தன் முடிவைத் தீர்மானமாக கூறிவிட்டு நகர மற்றவர்களும் தங்கள் ஜாகைக்கு சென்றனர்...

அழுதபடியே வீட்டிற்குள் நுழைந்த பேத்தியை காமாட்சி பாட்டி அதிசயத்துடன் பார்த்தார்.... எந்த விஷயமாக இருந்தாலும் ஈசியாக எடுத்துக்கொள்ளும் மைத்தி பொதுவாக அழுவது மிக மிக அரிது... தன் தோழிக்கு காட்டுவதற்காக உற்சாகமாக பந்தெடுத்து சென்றவள், அடுத்த பத்தாவது நிமிடத்தில் அழுது கொண்டு வருவது சற்று ஆச்சர்யமாக இருந்தது... அதுவும் இரவு படுக்க மட்டுமே,  தான் இருக்கும் இடத்திற்கு வரும் பேத்தி இந்த சமயத்தில் வருவது வேறு அதிசயமாக இருந்தது...

“என்னாச்சுடா கோந்தே... எங்கயானும் விழுந்துட்டியா... உடம்புக்கு முடியலையா.... ஏன் அழற...”, முதுகைத் தடவியபடியே கேட்டார் காமாட்சி பாட்டி...

பதிலேதும் சொல்லாமல் தன் அழுகையைத் தொடர்ந்தாள்...

“என்னன்னு சொன்னாத்தானேடா தெரியும்... அம்மா ஏதானும் திட்டினாளா... இல்லை உன் மாமா பசங்களோட ஏதானும் சண்ட போட்டியா...”

மறுபடியும் விசும்பல் மட்டுமே வந்தது...  குனிந்த தலை நிமிரவில்லை...

“இங்க பாருடா கோந்தே... மொதல்ல அழறதை நிறுத்து... அழுகை எதுக்கும் தீர்வு கிடையாது...”, அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணைத் துடைத்து தண்ணீரை அருந்தக் கொடுத்தார் காமாட்சி பாட்டி...

“நீதான் சமத்தாச்சே... எதுக்கும் அழமாட்டியே... இப்போ சொல்லு என்னாச்சு...”

“பாட்டி நோக்கே நன்னாத் தெரியுமில்லை...  எனக்கு கிரிக்கெட் எத்தனை பிடிக்கும், நான் எவ்ளோ நன்னா பால் போடுவேன்னு...”

“ஆமாம் அதுக்கு என்ன, மாது உனக்கு விளையாடத் தெரியாதுன்னு கோட்டி பண்ணினானா...”

“இல்லை பாட்டி, அவன்லாம் எதுவும் சொல்லலை...”

“அப்பறம் இப்படி புழிய புழிய அழற அளவுக்கு என்னாச்சு...”

“என்னோட விளையாடற குட்டி பொண்ணும், அவ அப்பாவும் வந்தால்ல... நான் நன்னா பால் போடறேன்னு என்னை ஏதோ அகாடமில சேர்த்து விடறேன்னு சொன்னா... அதுக்கு பாட்டியும், தாத்தாவும், அதெல்லாம் கூடாது, இனிமே மைத்தி விளையாட மாட்டா அப்படின்னு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.