(Reading time: 11 - 21 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 21 - சகி

து ஓர் சாதாரண காலைப்பொழுதாகவே நகர்ந்துக் கொண்டிருந்தது உதகையின் ஆட்சியருக்கு! ஆயினும், அது சாதாரணமானது இல்லை என்பதனை எப்போதும் போல் இல்லாது அவன் வீட்டில் இருக்கும் நிகழ்வு மட்டுமே அறிந்திருக்கும். என்னத்தான் வாழ்நாள் முழுதுமே ஒன்றாக கழிக்கப் போகிறார்கள் என்றாலும், ஆசைக் கொள்ளும் அறுபது தினங்களும், மோகங் கொள்ளும் முப்பது தினங்களும் அனைவரது வாழ்விலும் மலரும் நறுமலரை போன்றதே! திருமணத்திற்கு முன்னால் இருந்த காதல் அங்கீகாரம் பெற்றுவிட, ஏதோ ஒன்றினை இழந்ததாகவே எண்ணின அன்புக் கொண்ட இரு நெஞ்சங்களும்! திருமணத்திற்கு முன் பெற்ற காதல் சுவையானது என்றால், திருமணத்தின் பின் கிடைக்கும் காதல் வரையறுக்கப்படாதது. மிக அமைதியானச் சூழல் அது...மிக மிக அமைதியானச் சூழல்! ஆனால், அச்சூழலினை அவ்விருவருமே நிம்மதியாக இருக்க விடவில்லை.

"விளையாடாதீங்க! அதை என்கிட்ட கொடுங்க!" அவளைப் பதைபதைக்க வைக்கும் அளவிற்கு ஏதோ ஓர் ஆயுதத்தினைக் கொண்டிருந்தான் அசோக். அவள் எட்டிப்பிடிக்க தாவும் போதெல்லாம், அவள் கரத்திலிருந்து நழுவி ஓடுவது அவனுக்குப் பெரிதான ஒன்றாகவில்லை.

"ஏங்க...இப்படி பண்றீங்க? உங்கக்கிட்ட இதைக் காட்டியதே தப்பா போயிடுச்சு! இப்போ அதைக் கொடுக்கப் போறீங்களா இல்லையா?" என்று அவள் மீண்டும் அவனைப் பிடிக்க முயல, மீண்டும் நழுவினான் அவன்.

"இரு..! என்னன்னுப் பார்ப்போம்! சோஷியல்ல...எல்லா எக்ஸாமிலும் ஃபெயிலா?" என்று குபீரென சிரித்து வெடித்துவிட்டான் அசோக். அவனிடம் இருந்தது வேறு ஒன்றுமல்ல, சிவன்யாவின் பள்ளி மதிப்பீட்டு சான்றிதழ்! கணிதத்தினைத் தவிரவும் வேறு எதிலும் தேர்ச்சிப் பெறாத ஒரு மதிப்பீட்டு சான்றிதழ் அவனிடத்தில் சிக்கிக்கொள்ள, அதனை மீட்கவே இவ்வளவு களம்!

"நீங்க ஆபிஸ்ல வந்து என்னைப் பார்க்கும் போது என்ன சொன்னீங்கன்னு ஞாபகமிருக்கா டீச்சர்? நீங்க ஐ.ஏ.எஸ் எக்ஸாம்க்கு படிக்கப் போறேன்னு சொன்னீங்க!எப்படி மேக்ஸ் வைத்தே ஐ.ஏ.எஸ் ஆயிடலாம்னு நினைப்பா?" அவன் விடுவதாக இல்லை...அவனது அந்தக் குபீர் சிரிப்பு காரணமே இன்றி அங்கு புகுந்துக்கொள்ள, அவளுக்கோ காதில் புகைவரா குறையாக வெகுண்டது!

"போதும்! போதும்! என்னமோ நீங்க மட்டும் எல்லாத்திலும் நல்ல மார்க் எடுத்த மாதிரி தான்!" முகம் சுழித்துக் கொண்டாள் அவள். அவள் கோபப்படுகிறாள் என்ற வேளையிலும் அவளை வெறுப்பேற்றவே தூண்டியது அவன் மனம்!

"டீச்சர்! நான்...பத்தாவதுல ஸ்டேட் ஃபர்ஸ்ட்!  ப்ளஸ் டூ ல டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட்! டிகிரி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.