(Reading time: 11 - 21 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

"நான் போய் டிரஸ் பேக் பண்ணி வைக்கிறேன்." என்று பதில் மொழிந்தாள் சிவன்யா. சட்டென அவள் மனம் மாறியதில் ஆச்சரியமாய் அவளை நோக்கினான் அசோக். எவ்வாறு மாறாமல் இருக்கும், தந்தை மற்றும் மகன் சேருவதற்கு இதைவிடவும் சிறந்த வாய்ப்பு அமையும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.

"நாம எங்கே தங்கப் போறோம்?" என்றதும் ஏனோ சட்டென அவன் முகம் இருண்ட வனமாய் மாறியது. பெரும் தயக்கங்களுக்கு மத்தியில்,

"அங்கே தான்!" என்ற ஒற்றை வாக்கியத்தில் முடித்தான் அசோக். அவன் இதயத்தில் மறைந்திருக்கும் அந்த உயர்ந்த அன்பினை வெளிக் கொண்டு வரும் மார்க்கமானதுப் புலப்படாதது! ஒருவேளை, கடந்தக் காலத்தில் சூர்ய நாராயணனோ அல்லது தர்மாவோ, இருவரில் எவரேனும் ஒருவர் தங்கள் உணர்வுகளைக் கடந்து காதலுக்கு மதிப்பளித்திருந்தால், இந்நேரம் அவர்களின் ஒற்றை வாரிசு இவ்வளவு பெரிய தர்மசங்கடமான நிலையினை அனுபவித்திருக்க வேண்டிய அவசியமே எழாமல் போயிருக்கும்! இருவரில் ஒருவர் கூட, அவனது எதிர்காலம் குறித்து சிந்திக்கவே இல்லை என்பதே சங்கடமான உண்மை!

"பத்தே நாளில் திரும்பி வந்துடுவோம்!நான் சித்தப்பாக்கிட்ட பேசிடுறேன்!" என்று கூறி எழுந்து சென்றான் அசோக்.  ஆழ்மனதில் ஏதோ ஓர் சிறிய நம்பிக்கை எட்டிப் பார்த்தது. இந்த அனைத்து வேதனைகளும் தீரும் நன்னாள் வெகுத் தொலைவில் இல்லை என்பது மட்டும் ஒற்றை உண்மையாய்! அனைத்தும் நன்முறையில் முடிந்தாக வேண்டும் என்பதே பெண்ணின் ஒற்றை வேண்டுதலாய்!

அன்றிரவு...!

"ஆமா சித்தப்பா! நாளை மறுநாள் காலையில கிளம்புறோம். சாயந்திரத்துக்குள்ளே வந்துடுவோம் சித்தப்பா!" என்றுத் தொலைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தான் அசோக்.

"சரிங்க சித்தப்பா! நான் காலையில பேசுறேன்." ஏறத்தாழ இருபது நிமிட உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்து இணைப்பினைத் துண்டித்தவன், உறங்குவதற்கான நேரம் கடப்பதனை உணர்ந்தவனாய், அறையுள் நுழைந்தான். அங்கு அவனுக்கு முன்பாகவே அவன் தேவியானவள், நித்திரைலோகத்தில் பயணித்திருந்தாள். குளிரினையும் பொருட்படுத்தாமல் போர்வையின்றி உறங்கும் அளவிற்கு சோர்வுற்றிருந்தாள் அவள். விழிகளில் காதலினைத் தாங்கியவனாய், அவள் முகம்  ஏறிட்டவன், சிறுப் புன்னகையோடு அவளுக்குப் போர்த்திவிட்டான். தனது கைப்பேசிக்கு மின்னணு உயிர்ப்பினை நல்கியவன், ஓய்வு வேண்டி தானும் அவளருகே சயனித்தான். சில நொடிகளுக்கு எல்லாம் அவன் கண்ணயற முயன்ற

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.