(Reading time: 7 - 14 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 07 - ஜெய்

மைத்தி காமாட்சி பாட்டியிடம், பீச்சிற்கு சென்று விளையாட, கற்பகம் பாட்டியிடம் அனுமதி வாங்கித் தருமாறு கூற,  காமாட்சி பாட்டி என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தாள்...

இங்க பாருடி கோந்தே... உங்க பாட்டி ஒத்துக்கவே மாட்டா.... தோட்டத்துல விளையாட அனுப்பவே அத்தனை யோசிச்சா... இதுல பீச்சுக்கு போறதுன்னா கண்டிப்பா அனுமதிக்க மாட்டா....”

“பாட்டி, பாட்டி ப்ளீஸ் பாட்டி... உன்னோட மொத்த திறமையையும் காட்டி எப்படியானும் பெர்மிஷன் வாங்கிக் குடு பாட்டி.... ப்ளீஸ்....”. மைத்தி பாட்டியை மஸ்கா அடித்துக்கொண்டிருக்க, பத்ரி பாட்டியின் அறைக்குள் வந்தான்....

“பத்ரி நீயே இவக்கிட்ட சொல்லுடா... பீச்சுல போய் விளையாடணும்ன்னு அடம் பண்ணிண்டு இருக்கா...”

“பாட்டி நானே அது விஷயமா பேசத்தான் வந்தேன்... அன்னைக்கு நம்மாத்துக்கு ஒரு மாமா வந்தா இல்லையா... அவர் மறுபடியும் போன வாரம் நாங்க விளையாடும்போது வந்து அந்த அகாடமி பத்தி சொன்னார்... இந்த வாரம் அங்க  பந்து போட கோச் பன்றவரை கூட்டிண்டு வரேன்னு சொல்லி இருக்கார்... நான் எப்படியாவது  மைத்தியை கூட்டிண்டு வரேன்னு சொல்லி இருக்கேன்...”

“என்னடா நீ பாட்டுக்கு அவாக்கிட்ட மைத்தி வருவான்னு  சொல்லிட்டு வந்துட்ட... உங்க பாட்டி அதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாடா....”

“இந்த வாரம் பாட்டியும், தாத்தாவும் ஏதோ விஷேஷம்ன்னு சாயங்காலம் வெளில போறா... அவா வர்றதுக்கு ராத்திரி ஆயிடும்.... அவா வர்றதுக்குள்ள  போய் விளையாடிட்டு வந்துடறோம் பாட்டி ... ரகுவும் எங்களோட இந்த வாரம் வரேன்னு  சொல்லி இருக்கான்.... அதனால நீங்க பயமில்லாம அனுப்பலாம்....”

“ஏண்டா பெரியவாளண்ட பொய் சொல்றது தப்பில்லையோ ....”

“பாட்டி நாம எங்க பொய் சொல்லப்போறோம்... உண்மையை சொல்லாம மறைக்கப்போறோம் அவ்வளவுதானே...”

“அவாளுக்கு பின்னாடி தெரியவந்தா கஷ்டப்படுவாடா....”

“அதெல்லாம் தெரியாம பார்த்துக்கலாம் பாட்டி... நீங்க அத்தை, அத்திம்பேர் கிட்ட மட்டும் பெர்மிஷன் வாங்கிக் கொடுங்கோ போறும்...”, பத்ரி சொல்ல, ஆவலுடன் தன்னை பார்க்கும் தன் பேத்தியின் ஆசையை உடைக்க மனசு வராமல் தலையாட்டினார் காமாட்சி பாட்டி....

காமாட்சி பாட்டி தன் மகன் மற்றும் மருமகளிடம் பேசி ஒருவழியாக அவர்களை ஒத்துக்கொள்ள வைத்து மைத்தியை அந்த வார ஞாயிறன்று கடற்கரைக்கு விளையாட

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.