(Reading time: 7 - 14 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

இப்படி இருந்துட்டா குழந்தைங்க அவங்க நினைச்சதை சாதிக்கலாம்...”

“அவங்க பயம் அவங்களுக்கு .... பெரியவங்க சொல்றதுலயும் தப்பில்லை... துளசி சின்ன பொண்ணு... அதனால அவங்கம்மாவும், எங்க வீட்டு பெரியவங்களும் விளையாட ஒண்ணும் சொல்றதில்லை.... நாளைக்கே அவ வளர்ந்த பின்ன இதே நிலைமை இருக்குமா தெரியலை... ஆனா கிரிக்கெட்தான் அவ எதிர்காலம்ன்னு சொல்லிட்டானா எப்பாடு பட்டாவது அவளை அதுல முன்னுக்கு கொண்டு வந்துடுவேன்.... நான் பெரிய கிரிக்கெட் பிளேயரா வரணும்ன்னு சின்ன வயசுல ஆசைப்பட்டேன் ... ஆனால் என்னோட குடும்ப கஷ்டம் என்னை விளையாட விடலை... PUC முடிச்ச உடனே வேலைக்கு போயிட்டேன்...  இன்னும் எனக்கு அந்த வருத்தம் இருக்குது... அது என் பொண்ணுக்கு வர விடமாட்டேன்.... மைத்தியும் எனக்கு துளசி மாதிரிதான்.... நீங்க பணத்தை பத்தி கவலைப்படாதீங்க... ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுதா பார்க்கலாம்....”, கண்ணன் சொல்ல பத்ரியும், ரகுவும் நெகிழ்ந்து நின்றார்கள்...

துளசியிடமும், கண்ணனிடமும் விடைபெற்று இவர்கள் வீடு திரும்பினார்கள்... அவர்கள் பாட்டி, தாத்தா இன்னும் வீடு வந்து சேராத நிலையில் இன்றே அனைவரிடமும் பேசிவிடுவது நல்லது என்று ரகு எல்லாரையும் அவர்களின் ஆஸ்தான இடமான முற்றத்திற்கு வர சொன்னான்.....

“என்னடா இப்போ எதுக்கு எல்லாரையும், வர சொன்ன...”, ரகுவின் தந்தை கேட்க, அவன் இன்று கடற்கரையில் நடந்ததை கூறி மைத்தியை அகாடமியில் சேர்ப்பதை பற்றி கேட்டான்....

“அதுதான் அன்னைக்கே தாத்தா அதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு சொல்லிட்டாரேடா... திரும்பவும் எதுக்கு இப்போ ஆரம்பிக்கறேள்...”, மைத்தியின் இரண்டாவது மாமா கிருஷ்ணன் கேட்க,

“சித்தப்பா நீங்க யாருமே இதுவரை மைத்தி விளையாடி ஒரு வாட்டி கூட பார்க்கலை... அவளுக்குள்ள பால் போடறதுல எத்தனை திறமை இருக்கு தெரியுமா... அதை மேல கொண்டு வராம இப்படி ஆத்துக்குள்ள அமுக்கி வைக்க பார்க்கறேளே...”

“டேய் இதெல்லாம் அவளோட பிற்கால  வாழ்க்கைக்கு எத்தனை தூரம் உதவி செய்யும்ன்னு சொல்லு பார்ப்போம்... ஏதோ அவ டைப்பிங் கத்துக்கறேன், ஷார்ட்ஹான்ட் கத்துக்கறேன்னு சொன்னா உடனே சேர்த்து விடலாம் ... அது அவளுக்கு நாளைக்கு வேலைக்கு போறச்ச உபயோகப்படும்... விளையாட்டெல்லாம் ஓரளவுக்குத்தாண்டா.... அதுவும் கிரிக்கெட் பொம்மனாட்டி பொண்ணுக்கு தேவையா....”, கடைசி மாமாவும் முட்டுக்கட்டை போட்டார்...

“சித்தப்பா நீங்களே இப்படி பேசினா அப்ப பாட்டி, தாத்தாவ என்ன சொல்றது...  ஒருத்தருக்கு எதானும் ஒரு விஷயம் நன்னா வந்துதுன்னா அவாளை அதுல தூண்டி விட்டு  மேல கொண்டு வரணும்... ஆண், பெண்ணுன்னு வித்தியாசமெல்லாம் பார்க்க கூடாது.... P.T. உஷா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.