(Reading time: 16 - 31 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை  மறந்தறியேன்! - 08 - சாகம்பரி குமார்

"மாநான் சிட்டி வரைக்கும் போயிட்டு வரேன்"

"எதுக்கு ரேச்சல்?"

"ஜெமியோட ரூம் டெக்ரேட் செய்யனும்ஜன்னலுக்கு கர்ட்டன் வாங்கனும்படுக்கைல விரிக்ககூட நல்லதா பெட்சீட் வாங்கனும். அப்புறம் கொஞ்சம்…"

"இழுக்காதேநாளைக்கு காலைல போகலாம்."

"நாளைக்கு நான் பிஸி. இன்னிக்கே கார் எடுத்துட்டு போறேன்"

"நோ வேஉனக்கு என்ன வேணும் சொல்லு. நான் ஆளை அனுப்பி வாங்கி வர சொல்றேன்."

ஆவ்… அவள் சிட்டிக்கு போகணும் என்று திட்டம் போட்டதே அந்த சத்யனின் வரலாறை தெரிந்து கொள்ளத்தான்அந்த விஷயம் இப்போதைக்கு முடியாது போலவேற வழியைதான் தேடணும். அவனுக்கு வலிக்கற மாதிரி அவள் ஏதாவது செய்தாகணும்.. பொண்ணுங்கனா அவனுக்கு அவ்வளவு இளக்காரமா?.

அவள் கொஞ்சம் வலுவாகதான் நினைத்தாள் போல... அதற்கான சந்தர்ப்பம் இரண்டாவது நாளே வந்தது.

ஒரு மழைநாளில் அவள் பட்ட அவமானத்தை துடைக்க இன்னொரு மழை நாள் உதவி செய்தது. அன்றைக்கு அவள் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருக்கும் பொழுது வழியில் மழை பிடித்துவிட்டது. மேலும் மழையில் நனைய விருப்பம் இல்லாமல் ஒதுங்க நினைத்தாள். மழையிலிருந்து  அவளை காப்பாற்றிக் கொள்ளும் இடத்தை தேடிய பொழுது... வரும் வழியில் இருந்த பஸ் ஸ்டாப் கண்ணில் பட்டது. அந்த பஸ் ஸ்டாப் ஷெல்டர் கீழே நின்றாள். ஆள் அரவம் இல்லாமல் இருந்தது. கொஞ்சம் பயமாக இருந்தாலும் விரைவில் மழைவிட்டதும் வீட்டுக்கு சென்றுவிடலாம் என்று மனதை தைரியப்படுத்திக் கொண்டாள்.

அந்த பஸ் ஸ்டாப் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆக பிரிக்கப்பட்டு நடுவில் ஒரு சுவர் எழுப்பப் பட்டிருந்தது. பெண்களுக்கான பகுதியில் அவள் நின்று கொண்டிருந்த போது அங்கு ஒரு இருசக்கர வாகனம் வந்து நின்றது. யாரோ எவரோ என்று அவள் பதட்டமான போது அதிலிருந்து  சத்யன் இறங்கினான்.

அப்பாடி… அவன் அவ்வளவு டேஞ்சர் இல்லை. லூசுகுரங்குனு திட்டுவான்மத்தபடி டிஸ்டன்ஸ் விட்டுதான் நிற்பான். அனிச்சையாகவே  ஒரு ஒதுக்கம் தெரியும். நோ வொரிஅவள் இயல்பானாள்.

அவன் ஆண்களுக்கான பகுதியில் நின்று கொண்டான். அவன் அவளை கவனிக்கவே இல்லை. உண்மையில் அங்கு யார் இருக்கிறார்கள் என்பதைக் கூட அவன் பார்க்கவில்லை. மழையை மட்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். இவளும் தன்னுடைய பார்வையை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.